முகப்பு /தென்காசி /

தென்காசி குத்துக்கல்வலசையில் வேளாண் பொருட்கள் கண்காட்சி!

தென்காசி குத்துக்கல்வலசையில் வேளாண் பொருட்கள் கண்காட்சி!

X
வேளாண்

வேளாண் பொருட்கள் கண்காட்சி

Agriculture Exhibition : மதிப்பு கூட்டப்பட்ட வேளாண்  பொருட்கள் கண்காட்சி தென்காசியில் குத்துக்கல்வலசை பகுதியில் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான இடைமுக பணிமனை நடைபெற்றது. இதில் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் கண்காட்சி பிப்ரவரி 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது.

இதனை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும், அதனை செய்யும் முறைகள் பற்றியும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் கேட்டு தெரிந்துகொண்டார். இந்த கண்காட்சியில் எண்ணெய், பயிறு வகைகள், மீன் அமிலம், மலை தேன் ஆகிய பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மேலும் நாட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இங்கு மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு காய்கறிகள் பயிறு வகைகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Agriculture, Local News, Tenkasi