தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் 2 பதக்கங்கள் பெற்று தென்காசிக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா, கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அபிநயா, இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே தடகளத்தில் தீவிர பயிற்சி எடுத்து வந்த இவர் தற்போது சர்வதேச அளவிலான வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் Tashkent நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி நடந்த 5வது ஆசிய இளையோருக்கான தடகள போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற அபினயா 100மீ பிரிவில் 11.82 விநாடிகளில் வெற்றி இலக்கை அடைந்து வெள்ளி பதக்கமும் மற்றும் ரிலே தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் என இரண்டு சர்வதேச பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
‘எதிர்நீச்சல்’ படத்தில் வரும் அப்பா போல தடகள வீராங்கனையாக தனது மகளை உருவாக்க வேண்டுமென்பது அபினயா தந்தையின் ஆசையாக இருந்திருக்கு. நல்ல பயிற்சி கிடைச்சா தன் மகள் இன்னும் அதிகமாக சாதிப்பார் என்பதை அறிந்து, தன்னுடைய சொந்த ஊரில் இருந்து திருநெல்வேலி நகருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
திருநெல்வேலியில் வாடகை வீட்டில் இருந்து கொண்டு, காலை நேரங்களில், மகளை பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் அபினயாவின் தந்தை அதன் பின்னர் தன் சொந்த கிராமமான கல்லூத்துக்கு சென்று தனது வயலில் விவசய வேலைகளை முடித்துவிட்டு மாலையில் திருநெல்வேலி வந்து தன் மகளை மீண்டும் தடகள பயிற்சிக்கு அழைத்து சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மகளுக்காக தான் பட்ட சிரமங்களுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதை நினைத்து பூரிப்படைகிறார் அபினயாவின் தந்தை..
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விரைவில் தென் கொரியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா சார்பாக விளையாடவுள்ள அபிநயாவிற்கு நியூஸ் 18 உள்ளூரின் வாழ்த்துக்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sports, Tenkasi