ஹோம் /தென்காசி /

தென்காசி | வீட்டிலிருந்தே சுயதொழில்.. ஆர்கானிக் ஹென்னா கோன் தயாரிப்பில் அசத்தும் கடையநல்லூர் பெண்..

தென்காசி | வீட்டிலிருந்தே சுயதொழில்.. ஆர்கானிக் ஹென்னா கோன் தயாரிப்பில் அசத்தும் கடையநல்லூர் பெண்..

X
ஹென்னா

ஹென்னா

Tenkasi | ஹென்னாவை தயாரித்து அதை தொழிலாக்கி லாபம் சம்பாதிக்கிறார் சங்கரன்கோயிலைச் சேர்ந்த பெண் பர்வீன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தற்போது பெண்கள் அனைத்து துறையிலும் முன்னணி வகித்து வருகின்றனர். இதே போல பல பெண்கள் சுய தொழில் செய்து பலருக்கும் கற்றுக் கொடுத்தும் முன்னேறி வருகின்றனர். ஹென்னா தயாரிப்பு மற்றும் மெஹந்தி போடுவது என எப்போதும் படு பிசியாக இருக்கிறார் கடையநல்லூரை சேர்ந்த பர்வீன். யார் இவர் எப்படி இதை ஒரு தொழிலாக செய்து சம்பாதிக்கிறார் என்று தெரிந்துகொள்ள அவரது இடத்துக்குச் சென்றோம்.

இதுகுறித்து பேசிய அவர், ‘எனது பள்ளிப் பருவத்திலிருந்தே  மெஹந்தி போடுவதின் மீது மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற போதிலும் தற்போது பல பெண்களுக்கு தயாரிக்கும் முறை மற்றும் அதனை டிசைன் செய்வது குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

ஹென்னா தயாரிக்கும் பெண்

வெறும் நான்கே பொருட்களை கொண்டு ஒரே நாளில் ஆர்கானிக்கான ஹென்னா தயாரிக்க முடியும்.

ரூ.70-க்கு கிடைக்கும் kitkat மில்க்‌ஷேக்... சங்கரன்கோவில் வந்தா கண்டிப்பா ட்ரை பன்னுங்க...

வீட்டிலிருந்தபடியே ஹன்னா தயாரித்து ஒரு கோனை 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். அது போக மெஹந்தி ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வருகிறேன். வீட்டில் குளிர்சாதன பெட்டி இல்லாத காரணத்தினால் பிரஷ்ஷாக தயார் செய்த ஹென்னா கோன்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறேன்” என்றார்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi