முகப்பு /செய்தி /தென்காசி / “ஏன் குடிச்சிட்டு வந்திருக்க” - கண்டித்த மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன்.. தென்காசியில் அதிர்ச்சி..!

“ஏன் குடிச்சிட்டு வந்திருக்க” - கண்டித்த மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன்.. தென்காசியில் அதிர்ச்சி..!

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவர்

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவர்

Tenkasi | செங்கோட்டை அருகே மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சந்தனகுமார் (30) விவசாயி. இவரது மனைவி கௌசல்யா (25) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கணவர் சந்தனகுமார் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது, அடிக்கடி மது போதையில் வந்துள்ளார்.

அதை பார்த்த அவரது மனைவி கௌசல்யா சந்தனகுமாரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாக்குவாதம் பெரிய அளவில் சண்டையாக மாறவே, ஆவேசம் அடைந்த சந்தனகுமார் கையில் கிடைத்ததை வைத்து கௌசல்யாவை சரமாரியாக தாக்குவார் என்றும் பின்னர் சமாதானமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனை காரணமாக வைத்து கணவன் சந்தனகுமார் மது அருந்தி வந்துள்ளார். அப்போது,  மனைவி கௌசல்யா நல்ல நாள் நடக்கும்போது இப்படி குடித்துவிட்டு வரலாமா என்று கேட்கவே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு கட்டத்தில் போதை தலையின் உச்சிக்கு ஏறவே, ஆவேசம் அடைந்த சந்தனகுமார் தான் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கௌசல்யாவின் தலையில் வீசியுள்ளார். அப்பொழுது, கௌசல்யாவின் தலையில் வெடிகுண்டு வெடித்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகாமையில் இருந்த பொருள்களும் சேதமடைந்தன.

பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, கௌசல்யா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு முதற்கட்ட சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also see... பிரதமர் மோடியின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? - புகழ்பெற்ற பெண்ட்வால் வெளியிட்ட கணிப்பு இதுதான்!

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கோட்டை போலீசார் சந்தனகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தன குமாருக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? அவரே தயார் செய்தாரா? இல்லையெனில் வேறு யாரேனும் கொடுத்தார்களா? என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி 

    First published:

    Tags: Attempt murder case, Crime News, Husband Wife, Tenkasi