முகப்பு /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு..!

தென்காசி மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi News : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் கிராமம் வடகாசி அம்மன் கோவில் அருகில், சூரங்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிசந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. 

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் கிராமம் வடகாசி அம்மன் கோவில் அருகில், குரங்குடியில் வைத்து நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 73 பயனாளிகளுக்கு ரூ.25-30 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் கிராமம் வடகாசி அம்மன் கோவில் அருகில், சூரங்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிசந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரவிசந்திரன் பேசியதாவது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கடைக்கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்து பயன்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் நடுவக்குறிச்சி மைனர் கிராமம் வடகாசி அம்மள் கோவில் அருகில், சூரங்குடியில் மனுநீதி நாள் முகாம் நடைப்பெற்று வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு

இம்முகாமில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.46 லட்சம் மதிப்பிலான வரன்முறை பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை துறையின் மூலம் 3 பயனாளிக்கு ரூ.25,142 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளான்மைத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.13,570 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தொடர் விடுமுறை.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மக்களால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

மேலும் வேலைவாய்ப்பு துறையின் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூ.4.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டத்தின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.9.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ துறையின் மூலம் தாட்கோ உதவித்தொகை திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ. 7.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் மொத்தம் 73 பயனாளிகளுக்கு ரூ26.30 லட்சம் மதிப்பிலான நயத்திட்ட உதவிகர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம சபை கூட்டம் நடைபெறும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கிராமத்திற்கு தேவையாள அடிப்படை வசதியான குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட வசதிகளுக்கு மனு அளித்தவுடன் அதற்கான தீர்வு காணப்படும். நமது மாவட்டத்திற்கு சுமார் 218 சாலை வசதிக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து கிராமத்திலும் சாலை வசதி அமைத்து தரப்படும். எனவே பொதுமக்கள் அரசின் திட்டங்கள் கேட்டறிந்து திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்” என தெரிவித்தார். முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்த கண்காட்சியிளையும், தோட்டக்களை துறை, வேளாண்மை துறை, மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் சங்கரநாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷீலா, சங்கரன்கோவில் வட்டாச்சியர் பாபு, நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவர் சிவ ஆனந்தன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Local News, Tenkasi