ஹோம் /தென்காசி /

வேதனையில் வாடும் செங்கோட்டை மக்கள்.. காரணம் என்ன தெரியுமா?

வேதனையில் வாடும் செங்கோட்டை மக்கள்.. காரணம் என்ன தெரியுமா?

செங்கோட்டை

செங்கோட்டை

Tenkasi District News : திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டை தாலுகா தமிழகத்துடன் இணைந்து 66 ஆண்டுகள் ஆகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகா ஆகியவை தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இன்றுடன் 66 ஆண்டுகள் ஆகிறது. 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி அப்போதைய முதலமைச்சர் காமராஜர் முன்னிலையில் இந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளைகல்குளம்விளவங்கோடுசெங்கோட்டைநெய்யாற்றிகரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், ஆகிய ஒன்பது தாலுக்காக்களும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என 1945ம் ஆண்டு முதல் போராட்டங்கள் தொடங்கின. போராட்டங்கள் தீவிரமடைந்து அடக்குமுறை காரணமாக சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

  ஒருவழியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 9 தாலுக்காக்கள் தமிழகத்துடன் இணைந்தது. அதில் செங்கோட்டை தாலுகா தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.

  இதையும் படிங்க : பழைய குற்றாலம் அருவி குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான அருவியாக இருப்பதன் ரகசியம்..

  தமிழகத்துடன் இணைந்து 66 ஆண்டுகள் ஆகியும் செங்கோட்டை வளைவு முதல்மருத்துவமனை, காவல் நிலையம் வரை அனைத்தும் ஆங்கிலேயே மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எச்சங்களாக உள்ளனசெங்கோட்டை வளைவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சங்குச் சின்னம்இன்று வரை இடம் பெற்றுள்ளதை இப்போது போனாலும் காணமுடியும்.

  தமிழகத்துடன் செங்கோட்டை இணையும்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவுமே தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இங்குள்ள பல பகுதிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறது.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் தாலுகா தமிழகத்துடன் இணைந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என நம்பி போராடி இணைந்தோம். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. கேரளாவுடன் இணைந்து இருந்தால் கூட ஏதாவது நன்மைகள் நடந்திருக்கும்” என வேதனை தெரிவித்தனர்.

  இதையும் படிங்க : சிவனும் விஷ்ணுவும் ஒரே உருவமாகி பக்தர்களுக்கு காட்சி தரும் தென்காசி சங்கரநாராயணர் கோவிலின் சிறப்புகள்

  மேலும், “அதிக பட்டதாரிகளை கொண்ட எங்கள் மாவட்டத்தில் வேலை இல்லை. தொழிற்சாலைகள் இல்லை. வேலைக்காக பக்கத்து மாநிலமான கேரளாவை நம்பி தான் இங்கு இளைஞர்கள் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. கேரளாவுடன் இருந்திருந்தால் திருவனந்தபுரத்திற்கு இணையான வளர்ச்சியை செங்கோட்டை பெற்றிருக்கும்.

  பொருளாதாரம் கல்வி ஆகியவற்றிற்காக இந்த பகுதி மக்கள் தொலைதூரம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழக அரசு இந்த 66வதுஆண்டிலாவது எங்கள் பகுதி முன்னேற்றத்திற்கான திட்டங்கள் கொண்டு வர வேண்டும்என்று கோரிக்கை வைத்தனர்.

  தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tenkasi