முகப்பு /தென்காசி /

விவசாயிகளுக்கு மானியம், நலத்திட்ட உதவிகள் : தென்காசி ஆட்சியர் வழங்கினார்

விவசாயிகளுக்கு மானியம், நலத்திட்ட உதவிகள் : தென்காசி ஆட்சியர் வழங்கினார்

விவசாயிகள் குறைதீர்க்கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சிந்திரன் தலைமையில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 307 மனுக்களுக்கு 14 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ரவிச்சிந்திரன் உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரவிச்சிந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ரவிச்சிந்திரன் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 2023 - 24 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் - 1962 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 949 ஹெக்டேர், பயறு வகைகள் - 206 ஹெக்டேர் பருத்தி - 831, கரும்பு - 5 ஹெக்டேர், எண்ணெய் வித்து - 607 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாய பயன்பாட்டிற்காக பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 292 குளங்களிலும் ஊராக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 18 குளங்களிலும் வண்டல் மண் எடுத்திட அரசிதழில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வண்டல் மண் எடுத்தல் தொடர்பாக பிரதி வாரம் விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன்கிழமைகளில் வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.” என்று  மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2000 மானியத்துடன் விசைத் தெளிப்பான் மற்றும் ஒரு பயனாளிக்கு தார்பாலின் ரூ.830 மானியத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிச்சிந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகள் வழங்கப்பட்ட 307 மனுக்களுக்கு 14 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் தேர் திருவிழா.. மே 5ம் தேதி கோலாகலமாக நடக்கிறது..

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கு. பத்மாவதி, வேளாண்மை இணை இயக்குநர் தா.தமிழ்மலர், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச. கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் சுப்பையா,ராஜேஷ், முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தென்காசி வட்டார வேளாண்மைத் துறையினர், செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் தோட்டக்கலைத் துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் விவசாயப் பெருமக்களும் ஆகியோர் பார்வையிட்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi