முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் வெறும் ரூ.2க்கு இட்லி, வடை! எங்க கிடைக்கும் தெரியுமா?

சங்கரன்கோவிலில் வெறும் ரூ.2க்கு இட்லி, வடை! எங்க கிடைக்கும் தெரியுமா?

X
2rs

2rs idly shop 

Tenkasi News | இட்லி வடை 2 ரூபாய்க்கும் , பஜ்ஜி 3 ரூபாய்க்கும், டீ முறுக்கு அதிரசம் 5 ரூபாய்க்கும், பொங்கல் பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil), India

ஒரு நாள் ஆஃபர் போட்டாலே அத்தனை விளம்பர பலகைகள் எல்லாம் வச்சிருப்பாங்க. ஆனா 45 வருஷத்துக்கு மேல இட்லி வடை எல்லாம் வெறும் 2 ரூபாய்க்கு குடுத்துட்டு இருக்காங்க இந்த வயசான தாத்தா பாட்டி ஆனா இதுக்கு எந்த விளம்பரமும் இல்லாம சேவையா பண்றாங்க.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த தம்பதியர் நடத்தும் முருகன் டீ கடையில் காலைல ஏழு மணியிலிருந்து கூட்டம் அலைமோதும். இங்க சாப்பிட வர்ற முக்காவாசி பேரு வயசானவங்களும் காலையில் கூலி வேலைக்கு போறவங்களும் தான் இருக்காங்க.

இட்லி வடை இரண்டு ரூபாய்க்கும் , பஜ்ஜி 3 ரூபாய்க்கும், டீ முறுக்கு அதிரசம் 5 ரூபாய்க்கும், பொங்கல் பத்து ரூபாய்க்கும் விற்பனை செஞ்சுட்டு வராங்க. முருகனும் அவரோட மனைவியும் தான் இந்த வியாபாரத்தை செஞ்சிட்டு இருக்காங்க.. வியாபாரமா இல்ல சேவையா அப்படிங்கறத நீங்க முடிவு பண்ணிக்கோங்க. முருகன் மனைவி காலையிலேயே இரண்டு ரூபாய்க்கு சுடச்சுட வடை தயார் பண்ணிட்டு இருக்காங்க முருகனும் சிரிச்ச முகத்தோட எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்துட்டு இருக்காரு. விக்கிற விலைவாசில இவ்வளவு கம்மியான ரூபாய்ல எப்படி இவங்களால விற்பனை செய்ய முடியுது அப்படிங்கிறத அவங்க கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

”45 வருஷத்துக்கு முன்னாடி இது ஆரம்பிக்கும் போது வெறும் காலணா ஒரு ரூபாய்க்கு விற்பனை செஞ்சுட்டு இருந்தேன். விலைவாசி கூடுனதுனால ரெண்டு ரூபாய் ஆக்கிட்டேன்” அப்படின்னு முருகன் சிரிச்ச முகத்தோட சொல்றாரு. இருபது ரூபாய் இருந்தா போதும் வயிறு நிரம்ப காலை சாப்பாட சாப்பிடலாம் முருகன் டீக்கடையில. இதனாலையே இந்த பகுதியில் இருக்கிற வயசானவங்க காலை சாப்பாட்டுக்கு இந்த இடத்துக்கு வந்துடுறாங்க.

இவங்களோட பிள்ளைங்க அஞ்சு பேரும் டாக்டர், இன்ஜினியர், அரசாங்க வேலைன்னு இருந்தாலும் இவங்களோட வீடு பாக்குறதுக்கு ரொம்ப எளிமையா தான் இருக்குது. மேலும், லாபத்துக்காக இந்த தொழிலை செய்யல தர்மத்துக்காக மட்டுமே இந்த தொழிலை செஞ்சிட்டு இருக்கோம் அப்படிங்கறதையும் முருகன் சிரிச்சு முகத்தோட சொன்னாங்க.

இந்த முருகன் டீ கடை ராமச்சந்திரா ஸ்கூலுக்கு பின்னாடி தான் இருக்கு இந்த சுற்று வட்டார பகுதியில் இருக்கிறீர்களா நீங்களும் இந்த கடையில ஒரு டைம் சாப்பிட்டு பாருங்க சுடச்சுட மொறு மொறுன்னு ரெண்டு ரூபா வடை ரொம்ப சூப்பரா இருந்துச்சு.

First published:

Tags: Food, Idli, Local News, Tenkasi