ஹோம் /தென்காசி /

“பெண்களே ஆபத்து என்றால் 181 எண்ணுக்கு டயல் பண்ணுங்க..“ தென்காசியில் விழிப்புணர்வு..

“பெண்களே ஆபத்து என்றால் 181 எண்ணுக்கு டயல் பண்ணுங்க..“ தென்காசியில் விழிப்புணர்வு..

தென்காசி

தென்காசி

Tenkasi District News : தென்காசியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து தனியார் நிறுவனத்தில் பணிப்புரியும் பெண்களிடையே விழிப்புணர்வு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுரையின்படி சமூக சேவை மையமானசகி - ஒன் ஸ்டாப் சென்டர் மற்றும் காவல்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் தொழிற்சாலை பணியாளர்களிடையே நடைபெற்றது.

தென்காசி ஆலங்குளம் அருகே நல்லூரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இங்கு நடைபெற்றது.

இதில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள், பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள், பெண்களுக்கு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட உதவி எண் 181, ஒன் ஸ்டாப் சென்டர் சேவைகள், குழந்தை திருமணம் தடைச்சட்டம் பற்றி விவரிக்கப்பட்டது.

இதையும் படிங்க : தென்காசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. அதிகாரிகளுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை...

இந்த நிகழ்ச்சியில் பாலின சமத்துவ உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. சகி- ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, பெண்களுக்கெதிரான குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளர் சாந்தி, ஆலங்குளம் காவல் ஆய்வாளர் மகேஷ் குமார், காவலர் செந்தில் ராணி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஏசுதாசன், தங்கராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 250 க்கும் மே‌ற்ப‌ட்டோ‌ர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi