முகப்பு /தென்காசி /

சின்ன திருச்செந்தூரில் 1251 விளக்கு பூஜை.. ஏராளமான பெண்கள் பங்கேற்பு..

சின்ன திருச்செந்தூரில் 1251 விளக்கு பூஜை.. ஏராளமான பெண்கள் பங்கேற்பு..

X
சின்ன

சின்ன திருச்செந்தூரில் 1251 விளக்கு பூஜை

1251 Vilakku Poojai At Chinna Thiruchendur : தென்காசி அருகே நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி அருகே நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுமார் 1251 திருவிளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் சின்ன திருச்செந்தூர் என்று அழைக்கக்கூடிய ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு அலங்காரங்ளில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சப்பர வீதி உலா நடைபெற்று வந்தன. மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமாங்கல்ய பூஜை சிறப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது திருவிளக்கு பூஜையானது மிக விமர்சையாக நடைபெற்றது.

மேலும் உலக நன்மைக்காகவும் விவசாயம் செழித்திடவும் மாணவ மாணவிகள் அறிவுத்திறனை மேம்படுத்தவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகவும் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளுடன் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுமார் 1251 திருவிளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், வரும் 2ம் தேதி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க உள்ள பால்குட ஊர்வலம் மற்றும் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Religion18, Tenkasi