முகப்பு /தென்காசி /

ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை தெரியுமா? - முழு தகவல் இதோ!

ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை தெரியுமா? - முழு தகவல் இதோ!

X
மாதிரி

மாதிரி படம்

Bank Holidays | தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு செல்ல நினைக்கும் வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்றமாறி திட்டத்தை மாற்றி அமைத்துகொள்ளவும்.

  • Last Updated :
  • Tenkasi, India

ஏப்ரல் மாதம் என்றாலே புதிய நிதியாண்டின் தொடக்கமாகும். கடைகளில் புது கணக்கு பிள்ளையார் சுழி போட்டு அந்த வருடத்திற்கான நிதி ஆண்டை தொடங்குவார்கள். தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா இந்த பதிவை முழுவதும் முழுமையாக பாருங்கள்.

ஏப்ரல் 1ம் தேதி வங்கி கணக்கு வருடாந்திரத்திற்கான கணக்குகளை ஆரம்பிக்கும் அன்றே விடுமுறை தான். ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகள் விடுமுறை. ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 8ம் தேதி 2வது சனிக்கிழமை, ஏப்ரல் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வரிசையாக விடுமுறை நாட்கள் தான்.

ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் 16ம் தேதி ஞாயிறு விடுமுறை. மேலும் ஏப்ரல் 22ம் தேதி முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 22ம் தேதி மாதத்தில் 4வது சனிக்கிழமை ஏப்ரல் 23ம் தேதி ஞாயிறு விடுமுறை என வரிசையாக 3 தினங்கள் வங்கிகளுக்கு விடுமுறை. ஏப்ரல் 30ம் தேதி ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை. வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் ஆன்லைனில் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் . வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தை டெபாசிட் செய்யவோ எடுக்கவும் முடியாது என்றாலும் மற்ற இணைய சேவைகளில் எந்த சிரமமும் இன்றி பெற முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இந்த 12 நாட்கள் விடுமுறை காலத்தில் நெட் பேங்கிங் மற்றும் பிற ஆன்லைன் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆக மொத்தம் ஏப்ரல் மாதத்தில் வரும் 30 நாட்களில் 12 நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் தான்.

    First published:

    Tags: Local News, Tenkasi