முகப்பு /தென்காசி /

தென்காசி I.C.I பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு..

தென்காசி I.C.I பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு..

X
விழாவில்

விழாவில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு

Tenkasi News | தென்காசி இ.சி.ஈ.  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  பங்கேற்றார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசியில் உள்ள I.C.I  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டு பள்ளிக்கு நிலம் மற்றும் அரங்கம் அளித்த நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி நூற்றாண்டு மலரை அவர் வெளியிட முதல் பிரதியை மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்  பேசிய மாவட்ட ஆட்சியர், ”தலைமுறைதோறும் நினைத்துப் பார்க்கக்கூடிய ஈடற்ற கல்வி சேவையை வழங்கிய ஈஸ்வரன் பிள்ளை பெயரில் அமைந்துள்ள இந்த பள்ளி மேலும் பல நூற்றாண்டுகளை கண்டு நிலைத்த புகழுடன் திகழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். மேலும் ஈஸ்வரன் பிள்ளை வாழ்நாள் முழுவதும் கொடை வள்ளலாகவே வாழ்ந்து காட்டியதோடு மட்டுமல்லாமல் இலட்சக்கணக்கானோர் எண்ணங்களில் நினைவலைகளாவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கேடில் விழுச்செல்வம் ஆகிய கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வளவு பெரிய மைதானத்தை இப்பள்ளிக்கு வழங்கி பல இலட்சக்கணக்கான மாணவர்களிடத்தில் அறிவெனும் தீபமேற்றி அவர்கள் வாழ்வில் வெற்றி நடை போட காரணமாக இருந்த ராவ்பகதூர் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அவர்களின் புகழ் இந்த வையம் உள்ள வரை நிலைத்திருக்கும் என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர்பாண்டி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்கு குமார் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi