முகப்பு /தென்காசி /

தென்காசி ரயில் நிலையத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த மரங்கள் வெட்டப்பட்டது ஏன்?

தென்காசி ரயில் நிலையத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த மரங்கள் வெட்டப்பட்டது ஏன்?

X
வெட்டப்படும்

வெட்டப்படும் மரம்

Tenkasi Railway station | தென்காசி ரயில்வே நிலையத்தில் மின்சார தடம் அமைக்க 100 வருட பழமையான மரங்கள் வெட்டப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி ரயில் நிலையத்தை புனரமைக்கும் வேலைகள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இருக்கும் ரயில் தடத்தை அதிகரிக்க, மின்சார தடம் அமைக்க என வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளுக்கு இடையூறாக தென்காசி ரயில் நிலையத்தில் இருந்த ஐந்து மரங்கள் வெட்டப்பட்டன. நூற்றாண்டை கடந்து பல இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு கம்பீரமாக நின்ற மரங்களால் மனிதர்களிடமிருந்து தப்ப முடியவில்லை.

வெட்டப்பட்ட 100 ஆண்டு பழமையான மரம்

எண்ணில் அடங்கா பல பறவைகளுக்கு இவை தாய்வீடாக திகழ்ந்தன. மரங்கள் வெட்டப்பட்டதும் இதில் வசித்த பறவைகள் செய்வதறியாத தங்கள் கண்முன்னே தங்களுடைய வீடு அழிக்கப்படுவதை எண்ணி வருத்தத்தோடு அமர்ந்திருந்தன.

நூறு வருட பழமையான மரங்களை வெட்டும் வீடியோக்கள் சோகப் பாடல்களுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு சிலர் சமூக வலைத்தள பக்கங்களில் மரங்களை மிஸ் செய்வதாகவும், ரெஸ்ட் இன் பீஸ் என்றெல்லாம் கமண்ட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Tenkasi