முகப்பு /தென்காசி /

கடையநல்லூரில் காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

கடையநல்லூரில் காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

X
கடையநல்லூர்

கடையநல்லூர் பள்ளி

Kadaiyanallur school | கடையநல்லூரில் 1921 ஆம் ஆண்டு தாருஸ்ஸலாம் பள்ளி தொடங்கப்பட்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காமராஜர் திறந்து வைத்த பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நூற்றாண்டை கடந்த தாருஸ்ஸலாம் பள்ளியின் 2023 ஆம் ஆண்டிற்கான முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு மற்றும் பெருநாள் சந்திப்பு நாள் நடைபெற்றது . 700க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

கடையநல்லூரில் இருக்கும் தாருசலாம் பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும். இந்த காமராஜர் வந்து பார்வையிட்டதாகவும் சுதந்திரத்திற்கு முன்பே இந்த பள்ளி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் 100 ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூரில் தோன்றிய முதல் பள்ளி தாருசலாம். முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் காணொளிகள் போடப்பட்டது மேலும் முன்னாள் மாணவ மாணவிகள் அவரவர் ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

1921 ஆம் ஆண்டு தாருஸ்ஸலாம் பள்ளி தொடங்கப்பட்டது. மேலும் இது சுதந்திரத்திற்கு முன்பு கடையநல்லூரில் தோண்டப்பட்ட முதல் பள்ளி என்பது பெருமைக்குரிய ஒன்றாக இருக்கிறது. 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தாருசலாம் பள்ளி 1921 ஆம் ஆண்டு ஆண்டு விழாவை கொண்டாடிய நிலையில் தற்போது பள்ளியின் முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tenkasi