முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / யூடியூபில் அதிரடி மாற்றம்.. இந்த வசதி இனி இல்லை.. ஏன் தெரியுமா?

யூடியூபில் அதிரடி மாற்றம்.. இந்த வசதி இனி இல்லை.. ஏன் தெரியுமா?

யூட்யூப்

யூட்யூப்

Youtube stories | ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஸ்டோரீஸ்களும் அடுத்த மாதம் 26ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் நீக்கப்படும் என்றும் யூடியூப் அறிவித்துள்ளது. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி வரும் ஜூன் 26ஆம் தேதியுடன் நீக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பிரபல செயலியான யூடியூபில் கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்டோரீஸ் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.  யூடியூபில் தாங்கள் எப்படி வீடியோவை பதிவேற்றுகிறோம் என்பதை யூடியூபர்கள் கதையாக சொல்வதே ஸ்டோரீஸ் என்ற வசதியாகும்

10 ஆயிரம் அல்லது அதற்கும் மேலான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கும் யூடியூபர்களுக்கு இந்த பிரத்யேக வசதி அளிக்கப்பட்டு வந்தது. போதிய வரவேற்பு கிடைக்காததால் இந்த வசதியை செயலியில் இருந்து அடுத்த மாதம் 26ஆம் தேதியில் இருந்து நீக்கப்போவதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஸ்டோரீஸ்களும் அடுத்த மாதம் 26ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் நீக்கப்படும் என்றும் யூடியூப் அறிவித்துள்ளது. ஸ்டோரிஸுக்குப் பதிலாக கம்யூனிட்டி போஸ்ட் அல்லது ரீல்ஸ் வழியாக யூடியூபர்கள் தங்கள் கதைகளை தெரிவிக்கலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

First published:

Tags: Apps, Youtube