யூடியூப் ஒரு பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் ஆகும். இதில் பலரும் தங்கள் திறனை வெளிக்கொணரும் வகையிலான வீடியோக்களைப் பதிவிட்டு பயனடைந்து வருகின்றனர். சமீப காலத்தில் மற்ற தளங்களைப் போலவே யூடியூப் தனது பிரீமியம் வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தது.
இவ்வாறு தனது பிரீமியம் வெர்ஷனை பயன்படுத்த கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், அவர்களை ஈர்க்கும் விதத்தில், பல அட்டகாசமான அம்சங்களை அவ்வப் போது அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆம், கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு பின்னணி இசை, பிக்சர்-இன்-பிக்சர் சப்போர்ட் போன்ற விருப்பங்கள் உள்ளன.அது மட்டும் அல்ல, இப்போது யூடியூப் 1080p அல்லது முழு HD வீடியோ தெளிவுத்திறனின் மேம்பட்ட பிட்ரேட் வெர்ஷனில் வீடியோக்களைக் கொண்டு வருகிறது.
வீடியோவில் எண்ணற்ற விவரங்கள் அடங்கி இருந்தாலும், இந்த மேம்படுத்தப்பட்ட தரமானது விஷயங்களை சிறப்பாகக் காண்பிக்கும் என்று யூடியூப் கூறுகிறது. எனவே, இந்த புதிய 1080p வெர்ஷன் ஆனது வழக்கமான 1080p தரத்திற்கும் 4K தெளிவுத்திறனுக்கும் இடையில் உள்ளது.மேலும், பிரீமியம் அல்லாத சந்தாதாரர்கள், அதாவது கட்டணம் செலுத்தாமல் யூடியூப் பயன்படுத்தும் பயனர்கள், இதன் மூலம் 1080p வீடியோ தரத்திற்கான அணுகலை இழக்க மாட்டார்கள் என்பதையும் யூடியூப் உறுதிப்படுத்தி உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிரீமியம் பயனர்கள் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை அனுபவிப்பார்கள்.
Read More : விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!
தற்போதைக்கு, iOS இல் யூடியூப் பிரீமியம் வெர்ஷன் வைத்திருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பயனர்கள் தங்கள் தற்போதைய வீடியோவின் அமைப்புகளுக்குச் சென்று அதனை 1080p பிரீமியம் ஆப்ஷனை தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம். இந்த மாற்றம், அதாவது 1080p பிரீமியம் வெர்ஷனைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு உள்ளடக்கம் எவ்வளவு க்ரிஸ்ப் ஆக இருக்கும் என்பதையும், இதனை நிலையான 1080p ஆப்ஷன் உடன் ஒப்பிட்டு பார்த்தால் எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்வது கண்டிப்பாக சுவாரஸ்யமாக இருக்கும்.
நீங்கள் யூடியூப் பிரீமியம் வெர்ஷன் பயன்படுத்தும் அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களில் ஒருவராக இருந்தால் கண்டிப்பாக இந்த புதிய அம்சத்தை அனுபவித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். அதோடு, இது நிலையான நிலையான 1080p ஆப்ஷன் உடன் ஒப்பிட்டுப் பார்த்து அது பற்றியும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். யூசர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் அம்சங்கள் மேம்படுத்தபப்டும் மற்றும் பரவலாக அனைத்து ப்ரீமியம் யூசர்களுக்கும் வழங்கப்படும். எவ்வாறு வாட்ஸ்அப் தனது பீட்டா யூசர்களுக்கு புதிய அம்சத்தை முதலில் வழங்குகிறதோ, அதே போல இப்போது யூடியூப்பும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil News, Youtube