முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இனி ஃபோன் நம்பர் தேவையில்லை... யூசர் நேம் போதும்... வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்...

இனி ஃபோன் நம்பர் தேவையில்லை... யூசர் நேம் போதும்... வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்...

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

இனி பயனர்கள் தொலைபேசி எண் இல்லாமல், அவர்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயரை உள்ளிடுவதன் மூலம் மற்றவர்களுடன் உரையாடலைத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன், அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் வழங்கியது. தற்போது, வாட்ஸ்அப் மற்றொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்கள் மொபைல் நம்பர் உதவியில்லாமல் பயனர் பெயரைப் பயன்படுத்தும் வகையிலான வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த அம்சத்தை வாட்ஸ்அப் அமைப்பில் மெனு மூலம் அணுக முடியும். சுயவிவரப் பிரிவில் பயனர் பெயரை தேர்ந்தெடுப்பதன் மூலம், வாட்ஸாப்பில் மற்றவருக்கு மெஸேஜ் செய்யும் போது தொலைபேசி எண்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு தனித்துவமான மற்றும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய பயனர்பெயரை உருவாக்கி வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் பயனர்கள் தொலைபேசி எண் இல்லாமல், அவர்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயரை உள்ளிடுவதன் மூலம் மற்றவர்களுடன் வாட்ஸ்அப் சேட்டைத் தொடங்கலாம்.

வாட்ஸ்அப்பில் பயனர்பெயர்கள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் வெளியிடப்படவில்லை என்றாலும், பயனர்பெயர்கள் மூலம் தொடங்கப்படும் வாட்ஸ்அப் சேட்கள் வலுவான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அம்சம் தற்போது உருவாக்க நிலையில் உள்ளது என்றாலும், பீட்டா சோதனையாளர்கள் விரைவில் இதை முயற்சிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிய வருகிறது.

First published:

Tags: Meta, Technology, WhatsApp, Whatsapp Update