முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ்அப் மெசேஜ் தப்பாயிடுச்சா...? கவலை வேண்டாம்... மெட்டா கொண்டுவந்த புதிய அப்டேட்..!

வாட்ஸ்அப் மெசேஜ் தப்பாயிடுச்சா...? கவலை வேண்டாம்... மெட்டா கொண்டுவந்த புதிய அப்டேட்..!

மாதிரி படம்

மாதிரி படம்

WhatsApp’s new feature | வாட்ஸ்அப் இல் அனுப்பிய மெசேஜ்யை எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வாட்ஸ் ஆப்பில், அனுப்பப்பட்ட செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றும் செயலிகளில் வாட்ஸ் ஆப் பெரும் பங்காற்றி வருகிறது. இதனை தொடர்ந்து மேம்படுத்தும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தற்போது வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் பயனாளர்கள் எடிட் செய்துக் கொள்ளலாம். அதாவது அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் திருத்திக் கொள்வதற்கு வாட்ஸ் ஆப் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதன் மூலம் பயனாளர்கள் எழுத்துப் பிழையையோ அல்லது அனுப்பிய தகவல் வேறு விதமாக புரிந்துக் கொள்ளப்படுவதையோ மாற்றிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இதனை பயன்படுத்தி உள்ளனர். அது வெற்றிகரமாக அமைந்த பட்சத்தில் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

விரைவில் உலகம் முழுவதிலும் இருக்கும் பயனாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அனுப்பப்பட்ட செய்தி, எடிட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் எதிர் பயனாளருக்கு தெரியும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

top videos
    First published:

    Tags: WhatsApp, Whatsapp Update