முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஒரே வாட்ஸ்ஆப் எண்ணை இனி 4 மொபைல்களில் பயன்படுத்தலாம்... வந்தது அசத்தல் அப்டேட்..!

ஒரே வாட்ஸ்ஆப் எண்ணை இனி 4 மொபைல்களில் பயன்படுத்தலாம்... வந்தது அசத்தல் அப்டேட்..!

மாதிரி படம்

மாதிரி படம்

WhatsApp New Updates | வாட்ஸ் ஆப் செயலியில் குரூப் அட்மினின் ஒப்புதல் இன்றி புதிய நபர் இணைய முடியாத வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Interna, Indiaamericaamericaamerica

வாட்ஸ்ஆப் செயலியை சிலர் தவறுதலாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், சேரக்கூடாது என்பதை குரூப் அட்மினே தீர்மானிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குழுவில் உள்ள உறுப்பினர்கள் தேவையற்ற செய்திகளை அனுப்பினால் அவற்றை, அட்மின் டெலீட் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட்டை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் வெளியிட உள்ளது. தற்போது வாட்ஸ்ஆப் பயனாளர் ஒருவர் இன்வைட் லிங்கை கிளிக் செய்து எந்தவொரு குழுவுக்குள்ளும் நுழைய முடியும். ஆனால், இனி குரூப் அட்மினின் ஒப்புதல் இன்றி, புதிய நபர்கள் குழுவில் இணைய முடியாது. இதனிடையே, வாட்ஸ்ஆப் பயனாளர் ஒருவர், ஒரே அக்கவுன்ட் மூலம் கூடுதலாக 4 செல்போன்களில் அதை பயன்படுத்தும் வசதியை மெட்டா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மொபைல் ஃபோன இப்படி மட்டும் சார்ஜ் பண்ணாதீங்க..!

தற்போது மொபைல் போனில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் கணக்கை மடிக்கணினிகளில் ஸ்கேன் செய்து உபயோகிக்கலாம். மேலும் ஒரே சமயங்களில் பல்வேறு மடிக்கணினிகளிலும் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும். இந்நிலையில் தற்போது பல்வேறு மொபைல் போன்களிலும் ஒரே வாட்ஸ் ஆப் கணக்கை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக ரீதியான வாட்ஸ் ஆப் கணக்கை பயன்படுத்துவோர் பெரிதும் பயன் அடைவர் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Technology, WhatsApp, Whatsapp Update