முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி எடிட் செய்யலாம்... வருகிறது புதிய அம்சம்...!

வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி எடிட் செய்யலாம்... வருகிறது புதிய அம்சம்...!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

இனி வாட்ஸ் அப்பில் 60 நொடிகள் கொண்ட வீடியோ நோட்ஸ்களை அனுப்பலாம் என்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களில் திருத்தம் செய்யும் வசதியைப் பயனர்களுக்கு வழங்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வாட்ஸ் அப் செயலியில், மெசேஜ்களை எடிட் செய்ய முடியாததால் அதனை அழித்துவிட்டு மீண்டும் அனுப்பும் நிலை உள்ளது. இந்நிலையில், பழைய மெசேஜ்களை அழிக்காமல், அதில் திருத்தம் செய்து அப்படியே பயன்படுத்தும் வகையில் புதிய வசதி உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, எடிட் செய்யப்பட்ட குறுந்தகவல் அனுப்பியவர் மற்றும் அதனைப் பெறுபவர் என இருவருக்கும் அப்டேட் ஆகிவிடும். புதிய அப்டேட், வாட்ஸ் அப்பின் புதிய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட உள்ள நிலையில், பீட்டா வெர்ஷனில் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஹை-குவாலிட்டி கேமராக்களை கொண்ட டாப் 5 Mi ஸ்மார்ட் ஃபோன்களின் லிஸ்ட்..!

இதுதவிர டெலிகிராமில் 60 நொடிகளுக்குச் சிறிய வீடியோ நோட்களை அனுப்புவது போன்ற வசதியும் வாட்ஸ் அப்பில் இடம்பெற உள்ளது. பயனர்கள் வாட்ஸ்அப்-இன் கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்து அனுப்பலாம்.

top videos
    First published:

    Tags: Video, WhatsApp, Whatsapp Update