முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஹேக்கர்களுக்கு ஸ்கெட்ச் போடும் வாட்ஸ் அப்.. புது வசதியில் இருப்பது என்ன?

ஹேக்கர்களுக்கு ஸ்கெட்ச் போடும் வாட்ஸ் அப்.. புது வசதியில் இருப்பது என்ன?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whatsapp : உலக அளவில் உள்ள பல கோடி யூசர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புதிய வலைப்பக்கம் ஒன்றை வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது. இதில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை விளக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் மோசடிகளில் இருந்து பயனாளர்களைப் பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் ‘உலகளாவிய பாதுகாப்பு மையம்’ (Global Security Centre) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சமானது ஸ்பேமர்கள் மற்றும் தேவையற்ற தொடர்புகளிலிருந்து யூசர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பயனுள்ள தகவல் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக அளவில் உள்ள பல கோடி யூசர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புதிய வலைப்பக்கம் ஒன்றை வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது. இதில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை விளக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வாட்ஸ்அப் சேவை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி, உருது, குஜராத்தி உள்ளிட்ட 10 இந்திய மொழிகளில் யூசர்களுக்கு கிடைக்கும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பான பிரவுசிங்:

ஏற்கனவே வாட்ஸ்அப் மற்றும் ஒரு சில மெசேஜிங் ஆப்ஸ்கள், என்கிரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அதே போல, தனிப்பட்ட செய்திகளை ஸ்கேமர்கள் மற்றும் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாக்க, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப் தளத்தின் சிறந்த சேவைகளில் ஒன்றாகும். மெட்டாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் வாட்ஸ்அப் யூசர்களின் தனியுரிமை சேவைகளை மேம்படுத்த பல கட்டப் புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

புதிய சேவை, யூசர்களுக்கு வாட்ஸ்அப்பின் தனியுரிமை பாலிசிகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும். மேலும், அவர்களின் கணக்குகளில் கூடுதல் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும். பாதுகாப்பு முறைகளை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்கும். போலி, ஸ்பேம், உள்ளிட்டவற்றை கண்காணித்து முடக்கும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 2023-இல் மட்டும் 74 லட்சத்து 52 ஆயிரத்து 500 கணக்குகளை முடக்கி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஸ்பேம் செய்திகள் மற்றும் அழைப்புகளை எதிர்கொள்ளும் யூசர்களுக்கு பக்கபலமாக இருக்க, வாட்ஸ்அப் மூலம் பாதுகாப்பாக இருக்கும்படி நிறுவனம் பரப்புரை மேற்கொள்ள உள்ளது. அனைவருக்கும் எண்டு டூ எண்டு என்கிரிப்ஷன் பாதுகாப்பு வசதி தொடர்பான தகவல்களை கொடுத்துவருகிறது.

Also Read : ஐபோன் 13 வாங்க ஆசையா? குறைந்த விலையில் ஆன்லைனில் வாங்கலாம்.. முழு விவரம்..

வாட்ஸ்அப் அப்டேட்:

யூசர் பெயர்களுடன் தொலைபேசி எண்களை மாற்றுவதற்கு யூசர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தினையும் WhatsApp சோதித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவை பயன்பாட்டுக்கு வந்தால் யூசர்கள் தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மற்றவர்களுடன் தொடர்புகொள்ள தனித்துவமான யூசர்பெயரை தேர்வு செய்யலாம்.

உலகளாவிய பாதுகாப்பு மையத்தை அறிமுகப்படுத்தி, பாதுகாப்பு பரப்புரைகளை ஊக்குவிப்பதன் மூலம், யூசர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக WhatsApp கூறுகிறது.

First published:

Tags: Online Frauds, Scam, WhatsApp