முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ் அப் கொண்டு வந்த எடிட் ஆப்ஷன்.. எப்படி பயன்படுத்துவது? இதோ விளக்கம்!

வாட்ஸ் அப் கொண்டு வந்த எடிட் ஆப்ஷன்.. எப்படி பயன்படுத்துவது? இதோ விளக்கம்!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசெஜை மறுபடியும் எடிட் செய்யும் வசதி இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருவருக்கு வாட்ஸ் அப்-ல் நாம் அனுப்பிய மெசேஜ் தவறு என்றால் இதுவரை அந்த மெசேஜை டெலிட் செய்ய வேண்டும். இனி அது தேவையில்லை. அனுப்பிய மெசெஜை மறுபடியும் எடிட் செய்யும் வசதி இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 45 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக ஊடகம் வாட்ஸ் அப் செயலி. செய்திகள், புகைப்படங்கள், டாகுமெண்ட்கள் என எதையும் வாட்ஸ் அப் வழியாக மிக எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இப்படி பல்வேறு வகைகளிலும் பயனுள்ள வாட்ஸ் அப் செயலியை நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு புதுப்பித்துகொண்டே வருகிறது. அந்த வரிசையில் இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது எடிட் பட்டன் வசதி.

வாட்ஸ்அப் எடிட் பட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெவலப்பர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பப்பட்ட அடுத்த 15 நிமிடங்கள் வரை அடுத்த அதை எடிட் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ் அப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த வசதியை பயன்படுத்தி நாம் அனுப்பிய வாட்ஸ் மெசேஜை எப்படி எடிட் செய்வது என்பதையும் அவர் தனது வாட்ஸ் அப்-ல் பதிவிட்டுள்ளார்.

  • வாட்ஸ்அப்-ல் அறிமுகமாகியுள்ள எடிட் பட்டன் வெளிப்படையாக வைக்கப்படவில்லை. மாறாக ஒரு மெசேஜை தேர்ந்தெடுக்கும்போது ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் தோன்றும் த்ரீ டாட் மெனுவின் உள்ளே இந்த ஆப்சன் வைக்கப்பட்டுள்ளது.

Also Read : மொபைல் போன் கவர்களால் இத்தனை தீமைகளா! - தீர்வு என்ன?

  • வாட்ஸ்அப்-ல் சாட் பக்கத்தை திறந்து விட்டு, நாம் எடிட் செய்ய வேண்டிய மெசேஜை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு வலது பக்க மேல் இருக்கும் த்ரீ டாட்-ற்குள் சென்றால் அங்கு எடிட் பட்டன் இருக்கும்.
  • அந்த பட்டனை தேர்வு செய்த உடன் உங்கள் மெசேஜ் எடிட்டிற்கு தயாராகி விடும். தேவையான மாற்றங்களை செய்த பிறகு சென்ட் ஆப்சனை பயன்படுத்தி அந்த செய்தியை நாம் அனுப்பிவிடலாம்.
  • ஒருமுறை அனுப்பிய மெசேஜை எத்தனை முறை எடிட் செய்யலாம் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை எனத் தெரிகிறது. அதாவது ஒரு மெசேஜை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம்.
  • ஆனால், குறிப்பிட்ட மெசேஜை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே அதை செய்ய முடியும். அதோடு திருத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு மெசேஜும், எடிட் செய்யப்பட்ட மெசேஜ் என்பதை வெளிப்படுத்தும் ஒரு லேபிளை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
top videos

    First published:

    Tags: WhatsApp, Whatsapp Update