முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஒரே மாதத்தில் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த மெட்டா!

ஒரே மாதத்தில் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த மெட்டா!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

WhatsApp : மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளது மெட்டா

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் வாட்ஸ்அப். பல கோடி பயனர்களை கொண்டிருக்கிறது வாட்ஸ்அப். இது மிக முக்கியமான சமூகவலைதளம் என்பதால் சாமானியர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் யாரிடமும் இந்த செயலி இல்லாமல் இருக்காது.

புதிதாக ஆண்ட்ராய்டு போனை ஒருவர் வாங்கிய உடனேயே அவர் தரவிறக்கம் செய்யும் முதல் செயலி இதுவாகத்தான் இருக்கும். அந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது வாட்ஸ்அப் செயலி. உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதால் வாட்ஸ்அப்பில் அடிக்கடி பல்வேறு சிறப்பம்சங்களை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயம் மெட்டா நிறுவனத்திற்கு இருக்கிறது. அதையும் மிகச் சிறப்பாகவே செய்து வருகிறது மெட்டா நிறுவனம்.

டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ் அப் மெசேஜ்களை படிப்பது எப்படி?

அதே நேரத்தில் பாதுகாப்பு அம்சத்துக்காகவும் வாட்ஸ் அப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்தில் 45 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

500 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும். அதன்படி, மாதந்தோறும் வாட்ஸ் அப் இந்தியா நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை முடக்கி அதன்புள்ளி விவரங்கள் வெளியிட்டு வருகிறது.

top videos

    அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில், 4 லட்சத்து 59 ஆயிரத்து 7ஆயிரத்து 400 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,804 வாட்ஸ் ஆப் பயனாளர்கள் புகாரின் பெயரில் 504 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக பிப்ரவரி மாதத்தில் அதிக வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    First published:

    Tags: WhatsApp