முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / குறைந்த விலையில் உணவு ஆர்டர் செய்யலாம்... மத்திய அரசின் புதிய வசதி... எப்படி உபயோகிப்பது?

குறைந்த விலையில் உணவு ஆர்டர் செய்யலாம்... மத்திய அரசின் புதிய வசதி... எப்படி உபயோகிப்பது?

மாதிரி படம்

மாதிரி படம்

உணவு, வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் என பலவற்றை நாம் ONDC மூலம் ஆர்டர் செய்துக் கொள்ள முடியும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான ஆடைகள், உணவு, மளிகைப் பொருள்கள் என மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்க வேண்டும் என்றால் யாரும் அந்தெந்நத கடைகளுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனிலேயே நமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். நமக்காகவே Swiggy, zomoto, Zepto மற்றும் Blinkit போன்ற வணிக தளங்கள் செயல்பட்டுவருகிறது. ஆனால் சமீப காலங்களாகவே Swiggy, zomoto போன்ற ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தான் மத்திய அரசு ONDC (open Network for digital commerce) எனப்படும் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் உருவாக்கியுள்ளது. அனைத்து தரப்பு சிறு வணிகங்களையும் டிஜிட்டல் வர்த்தக துறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக மத்திய அரசின் DPIIT துறை கடந்த 2021 இல் அறிமுகம் செய்தது. தற்போது இந்த தளம் தான் இந்தியாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது என்று சொல்லலாம்.

இதன் மூலம் உணவு, வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் என பலவற்றை நாம் இதன் மூலம் ஆர்டர் செய்துக் கொள்ள முடியும். உணவகங்கள் தங்கள் உணவை நேரடியாக நுகர்வோருக்கு விற்க அனுமதிக்கிறது.

ONDC மூலம் எப்படி ஆர்டர் செய்ய முடியும்?

படி 1: முதலில் https://ondc.org/ என்ற இணையதளப் பக்கத்தை நீங்கள் பார்வையிடவும்.

படி 2: இப்போது, ‘ஷாப் ஆன் ஓஎன்டிசி’ டேப்பில் கிளிக் செய்யவும்.

படி 3: நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் ஆன்லைன் தளத்தை தேர்ந்தெடுக்கவும்

படி 4: 'இப்போது வாங்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: உங்கள் ஆர்டரைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 6: பணம் செலுத்த தொடரவும் என்பதை கிளிக் செய்தால் உங்களின் ஆர்டர் உறுதி செய்யப்படும்.

top videos

    இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இனி நீங்கள் சுலபமாக ஆன்லைனின் ஆர்டர் செய்துக்கொள்ள முடியும். இனி இந்த சேவையுடன் மக்கள் குறைந்த செலவில் அதிக உணவை நீங்கள் ஆர்டர் செய்துக் கொள்ளலாம். இதில் உணவுகள் மட்டுமின்றி மற்ற பொருள்களையும் மக்கள் ONDC மூலம் ஆர்டர் செய்து, குறைந்த செலவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்துக்கொள்ளலாம். இதை மக்கள் Magicpin ஆப்ஸைப் பயன்படுத்தலாம். அல்லது PayTm, Meesho, MyStore, Craftsvilla போன்ற தளங்களில் ONDC சேவையை அணுக முடியும். இந்த ஆன்லைன் சேவையானது கடந்த ஆண்டு பெங்களூருவில்  முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Online shopping, Online Transaction, Swiggy, Zomato