முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / விமான பயணத்தின்போது மொபைல் போனை ஏரோ ப்ளேன் மோடில் போடுவது ஏன்? - அட இதுதான் காரணமா?

விமான பயணத்தின்போது மொபைல் போனை ஏரோ ப்ளேன் மோடில் போடுவது ஏன்? - அட இதுதான் காரணமா?

ஏர்பிளேன் மோட்

ஏர்பிளேன் மோட்

நம் அனைவரின் ஸ்மார்ட்போனில் உள்ள ஏர்பிளேன் மோட் ஆப்ஷன்ஸ் எவ்வாறு எல்லாம் பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

  • Last Updated :
  • Chennai, India

இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன் நம் அனைவராலும் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.மக்கள் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சில நேரங்களில் ஸ்மார்ட்போன்களை அணைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

குறிப்பாக, விமானத்தில் பயணம் செய்யும் போது, ​​போனை ஏர்பிளேன் மோடில் வைக்க வேண்டும். விமானம் பறக்கும் போது செல்போனை சிக்கலுடன் பயன்படுத்தினால், விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே தான் ஏர்பிளேன் மோட் கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது.

விமான பயணத்தின் போது மட்டுமல்லாது மேலும் சில விதங்களிலும் இந்த ஏர்பிளேன் மோட் பயன்படுகிறது. அவசர காலங்களில் ஃபோனின் பேட்டரியைச் சேமிக்க விரும்பினால், இந்த ஏர் பிளேன் மோட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் ஏர்பிளேன் மோடில் உங்களுக்கு அனைத்து சிக்னல்களும் துண்டிக்கப்படுவதால் பேட்டரி வழக்கம் போல குறையாது.

சில முறை உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்கள் வரலாம். அப்போது, உடனடியாக ஏர்பிளேன் மோடில் போனை சிறிது நேரம் வைத்து பின்னர் அதை இயக்கவும். இதைச் செய்வதன் மூலம் நெட்வொர்க் மீண்டும் ஒழுங்காக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சிறிய இணைப்பு சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்படும்.

உங்கள் மொபைல் போன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் ஏர்பிளேன் மோடில் வைத்து சார்ஜ் போடுங்கள். இதன் மூலம் உங்கள் ஃபோன் பேக்ரவுண்ட் செயல்முறைக்கு பேட்டரியை தீர்த்துவிடும். எனவே போன் வேகமாக சார்ஜ் செய்யும்.

நீங்கள் மருத்துவமனை அல்லது ஆய்வகம் போன்ற பகுதிகளில் இருக்கின்றீர்கள் என்றால் உங்கள் மொபைல் வாயிலாக மின்காந்த கதிர் வீச்சு பாதிப்புக்கு ஆளாக நேரிடும். அப்போது ஏர்பிளேன் மோடை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து தப்பலாம்.

First published:

Tags: Flight travel