முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / சாம்சங், ஓப்போ போன்களை அடுத்து விவோவின் ஃபிளிப் மாடல் போன் இந்தியாவில் அறிமுகம்...

சாம்சங், ஓப்போ போன்களை அடுத்து விவோவின் ஃபிளிப் மாடல் போன் இந்தியாவில் அறிமுகம்...

விவோ

விவோ

முதன்மை டிஸ்பிளேவுடன் செகண்ட்ரி டிஸ்பிளே கொண்ட புதிய பிளிப் மாடல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சீன நிறுவனமான விவோ.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு புதிய மாடலில் போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துவருகிறது. இந்தியாவில் ஏற்கனவே ஓப்போ, சாம்சங் நிறுவனங்கள் ஃபிளிப் மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் இப்போது விவோவும் ஃபிளிப் மாடல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது என்பது போல, விவோவின் ஃபிளிப் மாடல் போனில் இரண்டு டிஸ்பிளேக்கள் உள்ளது தனிச் சிறப்பு.

இந்த போன் ஃபிளிப் மாடல் போன்கள் பட்டியலில் வித்தியாசமான டிசைனை கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் என்பதில் சந்தேகமில்லை. விவோ எக்ஸ் ஃபிளிப் என்பது தான் அந்த மாடலின் பெயர். விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களையும் இப்போது பார்க்கலாம்.

விவோ எக்ஸ் ஃபிளிப் போன் சாம்சங் கேலக்ஸி செட் ஃபிளிப் 4,ஓப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப்  போன்றவற்றில் இருந்து சற்று வித்தியாசமானதாக செகண்டரி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் (2250x1080 பிக்சல்கள்) FHD+AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வெளிவந்துள்ளது.

செகண்டரி டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 3 இன்ச் (682 × 422 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் உள்ளது. இந்த டிஸ்பிளேவின் தனித்துவம் என்னவென்றால், முதன்மை டிஸ்பிளேவை போலவே இதுவும் கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளேவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளே பலருக்கும் பிடிக்கும்.

எனவே விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ எக்ஸ் ஃபிளிப் போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர்-சிப்செட்டை கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

விவோ எக்ஸ் ஃபோல்ட் 2 போனை போலவே, விவோ எக்ஸ் ஃபிளிப் போனும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வெளிவந்துள்ளது. கேமராவை பொறுத்தவரை 50MP பிரைமரி கேமரா (12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் கேமரா அடங்கும்) மற்றும் 32MP முன்புற கேமரா உள்ளது. பொதுவாக, ஃபிளிப் போன்களுக்கு இன்-டிஸ்பிளேவில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்படுவது கிடையாது.

பெரும்பாலும் சைடு மௌண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்களே பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், இந்த போன்கள் இரண்டு டிஸ்பிளேக்களை கொண்டிருப்பதால், இரண்டிற்கும் சேர்த்து சைடு மௌண்டெட் ஆக கொடுக்கப்படுகிறது. அதேபோல இந்த போனிலும் சைடு மௌண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரே உள்ளது. டைப் சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது. இந்த போர்ட்டை ஆடியோ ஜாக்கெட்டாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Also Read : ''மிகப்பெரும் ஆபத்து ஏற்படலாம்''.. செயற்கை நுண்ணறிவு குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

இந்த போர்ட்டுக்கு பக்கத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போன் மொத்தமாக 198 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் 4,400 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. அதற்காக 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. லேவண்டர், பிளாக் மற்றும் கோல்டு ஆகிய 3 கலர்களில் மார்க்கெட்டில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ எக்ஸ் ஃபிளிப் போனின் விலை ரூ. 71,640 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் சீனாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் இந்த புதிய போன் எப்போது முதுல் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்த போனுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. விவோவின் இந்த புதிய போன் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

First published:

Tags: Foldabe Smartphone, VIVO