பெரும்பாலும் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். சுமார் 173 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் தற்போது புதிய மோசடிக்கு வழிவகுத்துள்ளது. கடந்த சில நாட்களாக நம்மில் பலர் வாட்ஸ்அப்பில் தெரியா எண்களில் இருந்து வீடியோ கால் வந்திருக்கும். அதுவும், +84, +62, +60 மற்றும் +27 என பல்வேறு எண்களில் துவங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகளை பெற்றிருப்போம்.
வாட்ஸ்அப் அழைப்பு மூலம் மக்களின் பணத்தை திருடுவதற்காக கண்டுபிடிக்கபட்ட புது விஷயம்தான் இந்த வீடியோ அழைப்பு. இந்த அழைப்புகள் பெரும்பாலும் மலேசியா, கென்யா மற்றும் வியட்நாம், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் நமக்கு சாதாரணமாக கால் செய்து, ATM பின், கார்டு எண் போன்றவற்றை கேட்டு மோசடி செய்து வந்தார்கள்.
ஆனால், தற்போது இவர்களின் திருட்டு இன்னும் நூதனமாகிவிட்டது. வாட்ஸ்அப் அழைப்பு மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளை காலி செய்ய முயற்சிக்கின்றனர். ஹேக்கர்கள் ஹேக்கிங்கிற்காக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், ஹேக்கர்கள் சர்வதேச எண்களில் இருந்து பயனர்களின் எண்களை அழைக்கிறார்கள். பின்னர், அவர்களுக்கு பகுதி நேர வேலைகளை வழங்குவதாக பேசி, பயனாளிகளை ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றனர். நீங்களும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்பை பெற்றால் உடனடியாக பின்வரும் 5 விஷயங்களைச் செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டாம் : அத்தகைய சர்வதேச எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை. அந்த அழைப்புகளை ஏற்று உங்கள் கருத்துக்களை கூறுவதன் மூலம் நீங்கள் உங்கள் வாங்கி கணக்கை காலியாக்க நேரிடலாம்.
ஏமாந்து விடாதீர்கள் : சர்வதேச எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தால், லாட்டரி அடித்ததாகக் கூறினால், அது ஏமாற்று வேலை. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி அல்லது லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அதை கிளிக் செய்வதன் மூலம் உங்களின் அனைத்து தகவலும் அவர்களுக்கு செல்லும்.
Also Read | உங்க ஃபோன் Slow-வா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க போதும்..
எண்ணை ப்ளாக் செய்யவும் : சர்வதேச எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்தால், அந்த எண்ணைத் ரிப்போர்ட் செய்து பிளாக் செய்யவும். அந்த எண்ணை பிளாக் செய்வது மட்டும் போதாது. அந்த சர்வதேச எண்ணை புகாரளிக்க வேண்டும். ஏனெனில், இது ஸ்பேம், மோசடி அல்லது ஏதேனும் தவறான செயலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அழைப்பு வந்த எண்ணை தொட்டால், உங்களின் வலது பக்கத்தில் 3 புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்து எண்ணை பிளாக் செய்யலாம். பிளாக் செய்யும் போது, ரிப்போர்ட் செய்து பிளாக் செய்யவும்.
பாதுகாப்பை அதிகப்படுத்தவும் : உங்கள் WhatsApp கணக்கில் இரண்டு ஸ்டெப் சரிபார்ப்பை நீங்கள் அமைக்க வேண்டும். இதற்கு உங்கள் கணக்கில் உள்நுழையும்போது உங்கள் கடவுச்சொல்லுடன் கூடுதலாக சரிபார்ப்புக் குறியீடு தேவைப்படுகிறது. இது உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்வதிவதில் இருந்து பாதுகாக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology, WhatsApp