வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வப்போது மழை இதமாக பெய்தாலும் இந்த வெயில்காலத்தை ஓட்டும் அளவுக்கு மழை கைகொடுக்குமா எனத் தெரியாது. இன்னும் 3 நாட்களில் அக்னி வெயில் தொடங்கவுள்ள நிலையில் பலரும் ஏசியை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளனர். வெயில் காலத்தில் ஏசியை அதிகம் பயன்படுத்துவதால் மின்சாரக் கட்டணம் அதிகமாவே வருகிறது. சிலர் வீடுகளில் விடிய விடிய ஏசி ஓடும். அப்படியானால் மின்சார கட்டணம் அதிகமாக வரும். அப்படி இருக்க, மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகள் உள்ளன.
ஏசி வெப்பநிலை:
ஏசியை ஒருபோதும் குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. ஏசியை 16 அல்லது 18 டிகிரியில் வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சர்வீஸ்:
சம்மருக்கு முந்தைய குளிர் காலத்தில் நீங்கள் ஏசியை உபயோகிக்காமல் விட்டுவிட்டு, பிறகு சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், அதனால் மின் கட்டணம் அதிகமாக வரலாம். ஏனெனில், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைத்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். அதனால் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள்.
அறை காற்றோட்டம்
ஏசியை ஆன் செய்யும் முன் அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடவும். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. இல்லையெனில் உங்கள் ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும் மின் கட்டணமும் அதிகமாகும்.
இப்போதெல்லாம் பெரும்பாலான ஏசிகள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மின்விசிறி:
நீங்கள் AC-யுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது, அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் AC காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air conditioner