முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வீட்டுக்குள் மினி தியேட்டர்.. சோனி அறிமுகம் செய்யும் சூப்பர் டிவி.. அசர வைக்கும் சிறப்பம்சங்கள்!

வீட்டுக்குள் மினி தியேட்டர்.. சோனி அறிமுகம் செய்யும் சூப்பர் டிவி.. அசர வைக்கும் சிறப்பம்சங்கள்!

சோனி டிவி

சோனி டிவி

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சோனி அதநவீன் தொழில்நுட்ப அம்சங்களுடன் 75 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய சந்தையில் சோனி நிறுவனத் தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வரிசையில் புதிய 75 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை கொஞ்சம் அதிகம் தான். இருந்தபோதிலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் சோனி நிறுவனம் கொடுக்கிறது.

இந்தியாவில் சோனி பிராவியா எக்ஸ் 75 எல் என்ற வரிசையில் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளுக்கும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சோனி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள சோனி பிராவியா எக்ஸ்75எல் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. மேலும்3840 x 2160 பிக்சல்ஸ், 4கே எக்ஸ்-ரியா ரியாலிட்டி ப்ரோ, லைவ் கலர் டெக்னாலஜி, மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர், ஃபிரேம் டிமிங் போன்ற பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

இந்த நான்கு ஸ்மார்ட் டிவிகளுக்கும் எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி சப்போர்ட் உள்ளது. இந்த சோனி ஸ்மார்ட் டிவிகள் 4கே பிராசஸர் X1தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த டிவிகள் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவி இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங், ஆட்டோ ஜெனர் பிக்சர் மோட், பிஎஸ்5 உள்ளிட்ட பல்வேறு கேமிங் அம்சங்களை கொண்டுள்ளன.

இந்த நான்கு சோனி ஸ்மார்ட் டிவிகளும், குறிப்பாக 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு சோனி பிராவியா எக்ஸ்75எல் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா, ஆப்பிள் ஏர்ப்ளே2, ஆப்பிள் ஹோம்கிட் போன்ற தரமான அம்சங்கைள கொண்டுள்ளன. இதன் அம்சங்களை பார்த்தால் மினி தியேட்டர் போல எஃபெட்டாக உள்ளது

Also Read : இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த பேஸ்புக் நிறுவனம்… கலக்கத்தில் ஊழியர்கள்!

இந்த நான்கு புதிய ஸ்மார்ட் டிவிகள். மேலும் ஓபன் Baffle ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள். வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளன புதிய சோனி ஸ்மார்ட் டிவிகள் விலையைப் பொறுத்தவரை கொஞ்சம் அதிகம்  தான்.

top videos

    சோனி பிராவியா எக்ஸ்75எல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.69,900-ஆக உள்ளது. 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.85,900-விலையிலும், 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.1,39,900-விலையிலும் கிடைக்கிறது. இந்த மூன்று டிவிகளுக்கும் ஏப்ரல் 24-ம் தேதி விற்பனைக்கு வரும். ஆனால் சோனி பிராவியா எக்ஸ்75எல் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் விற்பனை விவரத்தைச் சோனி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

    First published:

    Tags: Smart tv, Sony