ஒருவர் மனதில் இருப்பதை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்று பலரும் பலவிதமாக வருத்தப்பட்டிருப்போம். ஆனால் இப்பொழுது மனதில் என்ன இருக்கிறது, என்ன சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது, எதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் எளிதாக தெரிந்து கொள்வது சாத்தியமாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன், செயற்கை நுண்ணறிவும் சேர்ந்து மனதில் இருப்பதை சிந்தனைகளை டீகோட் செய்ய முடியும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
மூளையில் ஒரு சில பகுதிகளில் இம்பிளாண்ட்ஸ் வைக்கப்பட்டு எண்ணங்களும் சிந்தனைகளும் டீகோட் செய்வதற்கு முயற்சி நடந்து கொண்டிருந்தன. அதில் ஒரு முயற்சியாக, பேச முடியாதவர்களுக்கு இம்பிலான்ட் பொருத்தப்பட்டு, அவர்கள் சொல்ல நினைப்பது வார்த்தையாகவோ அல்லது வாக்கியமாகவோ டைப் ஆகும் அம்சத்தை கண்டுபிடித்தது தான். மேலும், தூங்கும்போது கனவுகளை ரெகார்ட் செய்யும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்த தொடங்கிய பிறகு மூளை ஸ்கேன் செய்வதன் மூலமாகவும்,செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியும் சிந்தனைகளை எளிதாக டீகோட் செய்ய முடியும், மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்காது என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதின் தொகுப்பை, மூளையைக் ஸ்கேன் செய்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் என்று சமீபத்தில் செய்தி வெளியானது. சிந்தனைகளை தெரிந்து கொள்வது ஆபத்தாக மாறிவிடுமே என்ற கவலை வேண்டாம். மூளையை ஸ்கேன் செய்து, AI ஐ பயன்படுத்தும் மும்பு, அதற்குரிய fMRI என்ற இமேஜிங் ஸ்கேனரை மூளையின் செயல்பாடுகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். அதனால், இதை ஒரு நபரின் முழு சம்மதம் இல்லாமல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான அலெக்சாண்டர் ஹுத், தனது குழுவின் language decoder பற்றி தெரிவிக்கையில் "இது மிகவும் வித்தியாசமான அளவில் வேலை செய்கிறது" என்று கூறினார். மேலும், இந்த சிஸ்டம் சிந்தனைகள், யோசனைகள், பொருள், சொற்பொருள், சொற்றொடர் உள்ளிட்ட பல மட்டங்களில் செயல்படுகிறது என்றும் கூறினார்.
மூளையை ஊடுருவி வைக்கப்படும் இம்பிளாண்ட் இல்லாமல், இந்த ஸ்கேனரை பயன்படுத்தலாம். ஆய்வில் 3 மூன்று நபர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 16 மணி நேரம் MRI ஸ்கேனிங் இயந்திரத்துக்குள் நேரம் செலவிட்டனர். இவர்களுக்கு உரையாடல் ரீதியான கதைகள், பாட்காஸ்ட் உள்ளிட்டவை பிளே செய்யப்பட்டன.இதன் வழியே, மூளை மொழியை பிராசஸ் செய்யும் பகுதிகளில் இருந்து எவ்வாறு வார்த்தைகள், வாக்கியங்கள் மற்றும் அர்த்தங்கள் ஆகியவை ரெஸ்பான்சை உருவாக்குகின்றன என்பதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் map செய்தனர்.
இந்த டேட்டா, GPT-1 என்ற ai தொழில்நுட்பத்தின் நியூரல் நெட்வொர்க் லாங்குவேஜ் மாடலிடம் கொடுக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட AI மாடல், எப்படி ஒவ்வொரு நபரின் மூளையும் ஸ்பீச்சுக்கு ரெஸ்பான்ட் செய்யும் என்று பல தேர்வுகளைப் பட்டியலிட்டு, கிட்டத்தட்ட துல்லியமான ரெஸ்பான்ஸ் கிடைக்கும் வரை பல பதில்களை வெளிப்படுத்தும். இந்த ai மொழி தொழில்நுட்பம் எவ்வளவு துல்லியமாக முடிவுகளைத் தருகிறது என்பதை சோதிக்க, இந்த MRI இயந்தரத்தில் அமர வைக்கப்பட்ட ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு புதிய கதை ஒலிக்கப்பட்டது.
உதாரணமாக, ஆய்வில் கலந்து கொண்டவர்கள், “என்கிட்டே இப்ப வரைக்கும் டிரைவிங் லைசன்ஸ் இல்லை” என்று கேட்டதை, “அவள் இப்போது வரை எப்படி வண்டி ஓட்ட வேண்டும் என்று கற்றுக்கொள்ளவில்லை” என்று ai மாடல் வெளிப்படுத்தியது.அதே போல, ஆடியோ கதைகளைக் கேட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் சிந்தனையில் மூழ்கி இருந்ததையும் இந்த மாடல் கண்டறிந்தது. எனவே, இது மொழியை மட்டும் டீகோட் செய்யவில்லை, ஒரு வார்த்தை எவ்வளவு தூரம் பெரிதாக, விருட்சமாக மாறுகிறது என்பதைக் கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.