நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், விபத்து ஒன்றில் கால்கள் செயலிழந்தவரை நடக்க வைத்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இரு கால்களிலும் செயல் திறனை இழந்து முடங்கி கிடந்த ஒருவரை, மருத்துவர்களே கைவிரித்துவிட்ட போதிலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்து நடக்க வைத்துள்ளது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெர்ட்-ஜான் ஒஸ்காம் என்பவரின் முதுகு தண்டுவடம், விபத்து ஒன்றில் சேதமடைந்த நிலையில், அவரால் நடக்கமுடியாமல் போனது. முதுகு தண்டுவடத்தில் இருந்து கால்களுக்கு செல்லும் சிக்னல்கள் நின்றுபோனதுதான் இதற்கான முக்கிய காரணமாக கூறப்பட்டது.
பல்வேறு சிகிச்சைகள் அளித்த போதிலும் பயன் தாராமல் போனதால், தன் வாழ்நாள் இனி இந்த சக்கர நாற்காலிகளோடுதான் என்று சோர்ந்து போன ஜெர்ட்-ஜான் ஒஸ்காமுக்கு, லண்டனை சேர்ந்த முதுகெலும்பு சிகிச்சைக்கான தொண்டு நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது.
ஏற்கனவே, ஒஸ்காம் போன்றே முதுகுதண்டு பாதிக்கப்பட்ட டேவிட் M'Zee என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் குழந்தை பேறு அடைந்ததும், முதுகுத்தண்டு முற்றிலும் சேதமடைந்த மைக்கேல் ரோக்காட்டி மீண்டும் நடந்ததும் உத்வேகத்தை அளித்திருந்திருத்து. ஆனால், கணிப்பொறியின் கட்டளைகளை ஏற்று மட்டுமே இவை சாத்தியமான நிலையில், ஒரு ரோபோவை போல் உணர்ந்ததாக பயனர்கள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு மாற்று வழியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள், ஒஸ்காமிற்கு அறுவை சிகிச்சை செய்து முதுகு தண்டுவடத்தில் மட்டுமின்றி மூளையிலும் செயற்கை நுண்ணறிவு படி செயல்படும் சிப்களை பொருத்தினர். இதன்மூலம், மூளை என்ன யோசிக்கிறது என்பதை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிப்கள், ஒஸ்காமின் தலையில் பொருத்தப்பட்ட சென்சார்களுக்கு அனுப்பும். சென்சர்கள், அந்த சிக்னல்களை கட்டளைகளாக மாற்றி தண்டுவடத்திற்கு அனுப்பும். அந்த உத்தரவை ஏற்று ஒஸ்காமின் கால்கள் நடக்க தொடங்கி உள்ளன.
இதையும் வாசிக்க: அடடே..! 1 மணிநேரத்தில் 40,000 பானிபூரி தயாரிக்கும் சூப்பர் மெஷின்..! அகமதாபாத் பொறியாளர் அசத்தல்
இந்த அசாத்திய சாதனையை, டிஜிட்டல் பிரிட்ஜ் டெக்னிக் (wireless digital bridge) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாத்தியமாக்கி உள்ளது. இந்த தொழில்நுட்பம், சோதனை நிலையில் தான் உள்ளதாகவும், உடல் உறுப்புகள் முடங்கி போன நோயாளிகளுக்கு கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சேதமடைந்த நரம்புகள் மீண்டும் சீரடைய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology