முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஐஆர்எம்-வுடன் இணைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்..

ஐஆர்எம்-வுடன் இணைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்..

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

ஐஆர்எம்-வுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்படக்கூடிய அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து பலப்படுத்தும் விதமாக இடர் மேலாண்மை நிறுவனமான ஐஆர்எம்-வுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைந்துள்ளது.

இடர் மேலாண்மை என்பது நிறுவனங்களில் நிதி, சட்டம், பாதுகாப்பு, உற்பத்தி, லாபம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய அபாயங்களை முன்பே கண்டறிந்து அதற்கான பகுப்பாய்வு செய்து, ஆபத்தைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக உருவாக்கப்படும்.

இந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாகச் செயல்படுகிறது. நிறுவனத்தில் இடர் மேலாண்மையைப் பலப்படுத்தும் வகையில் தற்போது உலகளவில் இடர் மேலாண்மையில் முதன்மையான நிறுவனமாக இருக்கும் ஐஆர்எம்-வுடன் இணைந்துள்ளது.

ஐஆர்எம் ( Institute of Risk Management) நிறுவனம் சுமார் 140 நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைவதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்படும் இடர் மேலாண்மை பற்றி வெபினார்கள், ஆலோசனைக் கூட்டங்கள், நிறுவன மேலாண்மை அறிவு கட்டுரைகள் போன்றவற்றை நடத்தவுள்ளனர்.

இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இடர் மேலாண்மை தலைவர் சச்சின் முத்தா பேசுகையில், உலகின் முன்னணி தொழில்முறை அமைப்புடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், எங்களின் இடர் மேலாண்மை செயல்முறை மற்றும் நடைமுறைகள் சர்வதேச தரங்களுக்கு இணையாக உள்ளன என்றும் கூறியுள்ளார். மேலும், ஐஆர்எம்-வுடன் சேர்ந்து, உலகளாவிய சிந்தனைத் தலைமையை இயக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார்.

Also Read : ஐடி நிறுவனங்களின் அடுத்த பிளான்.. ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு வைக்கும் சாட் ஜிபிடி!

தொடர்ந்து, ஜியோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரஜ்னீஷ் ஜெயின் கூறுகையில், ஆபத்தை குறைக்கும் வகையில் ஜியோ ஏற்கனவே கட்டமைப்பை அமைத்துள்ளதாகவும், ஐஆர்எம்-வுடன் இணைவதன் மூலம் உலகத் தரத்தில் இடர் மேலாண்மையில் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

top videos

    நிறுவனத்தில் முதலீடு, ஊழியர்கள், விநியோகம், ஒழுங்குமுறை மற்றும் இணையவழி ஆபத்துகள் போன்றவை தான் முக்கியமான ஆபத்தை முன்கூட்டியே கண்டறியக்கூடிய பகுதிகளாக இருக்கின்றன. அந்த வகையில், உலகளாவிய இடர் மேலாண்மை மூலம், பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலை அமைப்பை மக்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Reliance, Reliance Jio