இந்தியா முழுவதும் 406 நகரங்களில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. மிகக்குறைந்த கால கட்டத்தில் 406 நகரங்களில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 365 நகரங்களில் 5 ஜி சேவையை ஜியோ வழங்கி வந்தது.
இந்நிலையில் புதிதாக இந்தியா முழுவதும் 16 மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் 41 இடங்களில் 5 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதோனி, பத்வெல், சிலகலூரிப்பேட்டை, குடிவாடா, கதிரி, நர்சாபூர், ராயச்சோட்டி, ஸ்ரீகாளஹஸ்தி, ததேபள்ளிகுடம் (ஆந்திரப் பிரதேசம்), மார்கோவ் (கோவா), ஃபதேஹாபாத், கோஹானா, ஹன்சி, நர்னால், பல்வால் (ஹரியானா), பௌண்டா சாஹிப் (இமாச்சலப் பிரதேசம்), ராஜூர் & காஷ்மீர்) தும்கா (ஜார்கண்ட்), ராபர்ட்சன்பேட் (கர்நாடகா). கன்ஹாங்காடு, நெடுமங்காடு, தளிபரம்பா, தலச்சேரி, திருவல்லா (கேரளா), பெதுல், தேவாஸ், விதிஷா (மத்திய பிரதேசம்) பண்டாரா, வார்தா (மகாராஷ்டிரா), லுங்கிலே (மிசோரம்), பியாசநகர், ராயகடா (ஒடிசா), ஹோஷியார்பூர் (பஞ்சாப்), டோங்க் (ராஜஸ்தான்) , காரைக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி அல்லிநகரம், உதகமண்டலம், வாணியம்பாடி (தமிழ்நாடு) மற்றும் குமார்காட் (திரிபுரா). ஆகிய 41 இடங்களில் 5ஜி சேவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, தூத்துகுடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவில்பட்டி, பொள்ளாச்சி, புதுச்சேரி, ஆம்புர், சிதம்பரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஏற்கனவே உள்ள நகரங்களுடன் காரைக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி அல்லி நகரம்,உதகமண்டலம் மற்றும் வாணியம்பாடி ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் ஜியோ ட்ரூ 5G விரைவாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கியிருப்பது எங்கள் ஜியோ நிறுவனத்திற்கு பெருமைக்குரிய விஷயமாகும். 2023ல் ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் பலன்களை ஒவ்வொரு இந்தியரும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio 5G