ரெட்மி நிறுவனம் A2 சீரிஸின் ஒரு பகுதியாக, சமீபத்தில் Redmi A2 மற்றும் Redmi A2+ ஆகிய 2 ஸ்மார்ட் போன்களை ரூ.10,000 பட்ஜெட்டிற்கு கீழ் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
Xiaomi-ன் சப்-பிராண்ட்டான ரெட்மியின் இந்த புதிய மலிவு விலை மாடல் மொபைல்கள் வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் பல வண்ண விருப்பங்களில் வருகின்றன. 2 மாடல்களும் 5,000mAh கெப்பாசிட்டி பேட்டரிகளை கொண்டுள்ளன மற்றும் MediaTek Helio G36 SoC ப்ராசஸர் மூலம் இயங்குகின்றன. இந்த மாடல்கள் Android 13-ல் இயங்குகின்றன.
விலை விவரங்கள்:
Redmi A2 மொபைலானது 2GB + 32GB, 2GB + 64GB மற்றும் 4GB + 64GB உள்ளிட்ட 3 வேரியன்ட்ஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 2GB + 32GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.6,299 என்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகைகளுடன் நீங்கள் இதனை ரூ.5,999-க்கு வாங்கலாம். Redmi A2 மொபைலின் 2GB + 64GB வேரியன்ட்டின் விலை ரூ.6,999 ஆகவும், 4GB + 64GB வேரியன்ட்டின் விலை ரூ7,999 ஆகவும் இருக்கிறது
அதே நேரம் Redmi A2+ மாடலில் 4GB + 64GB என்ற ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8,499 ஆகும். இந்த புதிய 2 மொபைல் மாடல்களும் அமேசான், Mi.com, Mi ஹோம் ஸ்டோர்கள் மற்றும் Xiaomi-யின் ரீடெயில் பார்ட்னர்ஸ் மூலம் இன்று (மே 23-ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் வாடிக்கையாளர்கள் வாங்க கிடைக்கும். மேலும் இந்த மொபைல்களும் பிளாக், லைட் கிரீன், லைட் ப்ளூ ஷேட்ஸ்களில் கிடைக்கும்.
Redmi A2 மற்றும் Redmi A2+ மொபைல்களின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:
Redmi A2 சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 2 மொபைல்களும் 6.52-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வருவதோடு, 400 நிட்ஸ் பிரைட்னஸை பெறுகின்றன. இந்த மொபைல்கள் MediaTek Helio G36 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜை கொண்டுள்ளன. இந்த ஃபோன்கள் டூயல் சிம் நெட்வொர்க்குகளை சப்போர்ட் செய்வதோடு, ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக தனி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை கொண்டுள்ளன.
Also Read : ஜிமெயில் மற்றும் யூடியூப் கணக்குகளை நீக்க போவதாக கூகுள் அறிவிப்பு!
கேமராவை பொறுத்தவரை Redmi A2 மற்றும் Redmi A2+ மொபைல்கள் AI-பேக்ட் டூயல் ரியர் கேமரா யூனிட் 8-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் QVGA கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்கு இந்த மொபைல்களின் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. Redmi A2 சீரிஸ் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழியாக சார்ஜ் செய்வதை சப்போர்ட் செய்யும் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல்களில் FM ரேடியோ மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல் பாக்ஸுடன் சார்ஜரை தருவதாகவும் Xiaomi கூறுகிறது.
Redmi A2 மற்றும் A2+ மொபைல்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் Redmi A2+ மொபைலின் ரியர் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Redmi, Smartphone