முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / 200 MP கேமராவுடன் பட்ஜெட் போன்.. ரியல்மி அறிமுகம் செய்யும் சூப்பர் செல்போன்!

200 MP கேமராவுடன் பட்ஜெட் போன்.. ரியல்மி அறிமுகம் செய்யும் சூப்பர் செல்போன்!

ரியல்மி

ரியல்மி

Realme 11 Pro : மிகவும் அசத்தலான அம்சங்களுடன் ரியல் நிறுவனம் 11 சீரிஸ் போன்களை இந்தியாவில் அடுத்த மாதம் களமிறக்க உள்ளது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுப்புது அம்சங்களுடன் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்வதில் ரியல்மி நிறுவனம் முன்னனியில் உள்ளது. ரியல்மி போன்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விற்பயைில் சக்கை போடு போட்டு வரும் 11 சீரிஸ் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். அநேகமாக ஜூன் 8 ஆம் தேதி இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமாக உள்ள போன்களின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன்கள் அறிமுகமாக உள்ளன. இவற்றில் 6. 7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த அமோல்டு டிஸ்பிளே உள்ளது.120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.

கேமரா: ரியல்மி 11புரோ போனில் 100 எம்பி பிரைமரி கேமரா மற்றம் 2எம்பி மேக்ரோ கேமரா என டூயல் ரியர் கேமரா உள்ளது. அதோடு 16எம்பி செல்பி கேமராவும் உள்ளது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் 200எம்பி ரியர் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும்  2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமராவும் உள்ளது.

ப்ராசஸர்: ஆக்டா-கோர் 6 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 பிராசஸரை கொண்டுள்ளன இந்த இரண்டு ரியல்மி போன்களும். realme UI 4.0 ஆண்ட்ராய்டு 13 ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளது இந்த போன்களில்.

ஸ்டோரேஜ்: ரியல்மி 11 புரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போன்கள் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன. கூடுதலான மெமரியை பெறுவதற்காக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது இந்த போன்களில்

பேட்டரி வசதி- 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 11 ப்ரோ ஸமார்ட்போன். அதேபோல் ரியல்மி11 புரோ பிளஸ் போனில்5000  எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் இந்த இரண்டு போன்களிலும் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்

கனெக்டிவிட்டி: 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த  இரண்டு போன்களும். இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன இந்த இரண்டு போன்களிலும். சன்ரைஸ் பீச், ஓவாசிஸ் கிரீன் மற்றும் பிளாக் என மூன்று வண்ணங்களில் இந்த போன்கள் கிடைக்கும்

இவ்வளவு வசதிகளுடன் இருக்கும் இந்த போன்களின் விலை பிரீமியம் டைப்பில் இல்லாமல் பட்ஜெட் விலையில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரியல்மி 11 சீரிஸ் போன்களை இந்திய வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

First published: