தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து, இயல்பை விடவும் வெப்பம் அதிகமாக உள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர், சமீபத்தில் வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாகி வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்ற போது, காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து விட்டது. தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வறண்ட காற்று வீசிக்கொண்டிருப்பதால் கடந்த 2-3 தினங்களாக வெப்பநிலை உயர்ந்துகொண்டு இயல்பை விடவும் அதிகமாகப் பதிவாகி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். கடும் வெயில் மட்டுமின்றி வெப்பக்காற்றுமக்களை வாட்டி வதக்கி வருகிறது.
இந்த வெயிலை, கிராமத்தில்கூட சமாளித்துவிடலாம். ஆனால் நெருக்கமான குடியிருப்புகளில் வசிக்கும் நகரத்து மக்கள் கதி கஷ்டம்தான். ஏசி, ஏர்கூலர் போன்றவற்றை வைத்தே கோடையை சமாளிக்க யோசிக்கும் அனைவருக்கும் ஏசி வாங்குவது அவ்வளவு ஈசி அல்ல. குறைந்தது 35ஆயிரத்தை தாண்டும் ஏசியை வாங்க முடியாதவர்களுக்காவே கிடைக்கிறது விலை மிக மிக கம்மியான போர்ட்டபிள் ஏசி.
வங்கி கணக்குகளில் ரூ.35 ஆயிரம் கோடி.. மக்களுக்கு மீண்டும் தர RBI முடிவு.. முழு விவரம்!
சிறிய அறை, வீடு, அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் இந்த போர்ட்டபிள் ஏசியை பயன்படுத்த முடியும். ஸ்பீட் லிமிட் கொண்ட இந்த ஏசி ஆன்லைன் தளங்களில் விற்பனை ஆகிறதுரூ.3000 முதல் கிடைக்கும் இந்த ஏசியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் ஏசியை போல இருக்காது. இது ஒரு வாட்டர் டெங் கூலர் ஆகும். அரை லிட்டர் தண்ணீர் அல்லது ஐஸ் கட்டிகளால் இது குளு குளு காற்றை கொடுக்கிறது
ஃபேன் வேகத்தை பொறுத்து இது 3 மணி முதல் 5 மணி நேரங்கள் வரை குளு குளு காற்றை கொடுக்கும்.இது 7 வகையான வண்ண விளக்குகளையும் கொண்டுள்ளது. ஏசி, ஏர்கூலார் வாங்க முடியாது என நினைப்பவர்கள் இந்த போர்ட்டபிள் ஏசியை வாங்க யோசிக்கலாம். ஆன்லைன் விற்பனை தளங்களில் இந்த ஏசி விற்பனையாகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AC