இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவில் 4ஜி நெட்வொர்க் சேவையை நிறுவ நோக்கியா நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 1972 ஆம் ஆண்டு முதன் முதலாக மனிதன் நிலவில் கால் பதித்தான் அதன் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை நாசா முன்னெடுத்துள்ளது. அதோடு, நிலவில் 4ஜி நெட்வொர்க் சேவையை நிறுவ நோக்கியா தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
நிலவின் மேற்பரப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், விண்வெளி வீரர்களுக்குத் தகவல் தொடர்பில் உதவும் வகையிலும் நோக்கியா ஸ்மார்ட்போன் பிராண்ட் 2023 இன் பிற்பகுதியில் நிலவில் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
SpaceX ராக்கெட்டின் உதவியுடன் இந்த நெட்வொர்க்கை நிறுவ நோக்கியா திட்டமிட்டுள்ளது. இது நோவா-சி லூனார் லேண்டரில் சேமிக்கப்படும் ஆண்டெனா பொருத்தப்பட்ட அடிப்படை நிலையத்தால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனுடன் சூரிய சக்தியில் இயங்கும் ரோவர் ஒன்றும் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லேண்டருக்கும் ரோவருக்கும் இடையே LTE இணைப்பு அமைக்கப்படும் என்றும் நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது. நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் போது இந்த 4G நெட்வொர்க் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்குத் தேவைப்படும் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்ய Nokia இத்தகைய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த நெட்வொர்க் சேவை மூலம், முக்கியமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள், நிலவில் நிறுவப்பட இருக்கும் ரோவர்களின் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஹை டெஃபினசன் வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நோக்கியா நம்புகிறது.
Also Read : புதிய எஸ்யூவி ரக காரை களம் இறக்கும் சிட்ரோயன்..! - ஏப்ரல் 27-ல் இந்தியாவில் அறிமுகம்!
அதோடு, இந்த 4G நெட்வொர்க் சேவை விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் இருக்கும்போது சக ஊழியர்களுடன் தொடர்புகொள்வதை எளிதாக்கும். மேலும், அந்த 4ஜி நெட்வொர்க் சேவை மூலம் நிலவின் இருண்ட, மனிதர்கள் செல்ல முடியாத பள்ளங்களில் என்ன இருக்கிறது என்பது குறித்து எளிதில் ஆய்வுகள் மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக நிலவின் மேற்பரப்பு வறண்டு காணப்படுவதாக பொதுவாக நம்பப்படும் நிலையில், அதன் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் தொடர்பான நிலைப்பாட்டை இந்த நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்திக் கண்டறிய முடியும் என்றும் நோக்கியா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Internet, Mobile networks, Moon