முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள்.. ஆப்பு வைக்கும் அதிரடி உத்தரவு!

தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள்.. ஆப்பு வைக்கும் அதிரடி உத்தரவு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நம்மை தொந்தரவு செய்யும் அறியாத எண்களில் இருந்து வரும் கால்களை தடைசெய்ய வேண்டும் என இந்தியாவில் இருக்கும் அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது. இதற்காக புதிய சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மை தொந்தரவு செய்யும் தெரியாத எண்களில் இருந்து வரும் கால்களை தடைசெய்ய வேண்டும் என இந்தியாவில் இருக்கும் அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது. இதற்காக புதிய சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல் போனால் சொல் பேச்சு என்பார்கள். ஆனால் இப்போது ஒருவருக்கு செல் போனால் வாழ்க்கையே போச்சு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு செல்போன் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.

இந்த செல்போனால் நமக்கு எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும், சி தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முதன்மையானர் ஸ்பேம் கால்கள். லோன் வேணுமா எனக் கேட்டும், பரிசு விழுந்திருக்கிறது என ஆசை காட்டியும், மருத்துவ உதவி செய்யுங்கள் எனக் கெஞ்சியும் தினமும் சில அழைப்புகளாவது நமக்கு வந்துவிடும். அப்படி வரும் அழைப்புகள் எல்லாம் நமக்கு யாரென்றே தெரியாத எண்களில் இருந்தே வரும். இதனால் நமக்கு தேவையில்லாத மன உளைச்சல் தான். இதைக் கட்டுப்படுத்தும்  நோக்கில் தான் டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

டிராய் அறிவித்துள்ள புதிய சட்டமானது முழுக்க-முழுக்க தெரியாத எண்களில் இருந்து தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு எதிரான ஒரு சட்டமாகும். இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் கம்பெனிகளுக்கும் பொருத்தும். இந்த புதிய விதியின்படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் ஏஐ ஸ்பேம் ஃபில்டர்களை பயன்படுத்த வேண்டும். இதன் கீழ் ஃப்ராடு மற்றும் ஹராஸ்மென்ட்டில் (Harassment) இருந்து செல்போன் நுகர்வோர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இந்த ஃபில்டர்கள் எந்தவிதமான போலியான அல்லது விளம்பர அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அடையாளம் கண்டு தடுக்கும். இவ்வகை கால்கள் மற்றும் மெசேஜ்கள் பெரும்பாலும் மோசடி செய்பவர்களாலும், பணம் திருடும் கும்பல்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அதை தடுக்கத்தான் இந்த புதிய சட்டம். இந்த சட்டம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் ஏர்டெல், ஜியோ, வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட  அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் ஏஐ ஸ்பேம் ஃபில்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்பேமர்கள் அடிக்கடி பயன்படுத்தும் மொபைல் எண்களை அடையாளம் கண்டு அவற்றை தடை செய்யவும் டெலிகாம் நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.

லேப்டாப் சார்ஜ் செய்ய பவர் பேங்க்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

top videos

    அதே போல் அழைப்பவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள உதவும் காலர் ஐடியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசும் டெலிகாம் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தால் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஸ்பேம் கால்கள் முற்றிலும் தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    First published:

    Tags: Mobile phone