முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / மொபைல் போன் கவர்களால் இத்தனை தீமைகளா! - தீர்வு என்ன?

மொபைல் போன் கவர்களால் இத்தனை தீமைகளா! - தீர்வு என்ன?

செல்போன் கவர்கள்

செல்போன் கவர்கள்

ஸ்மார்ட் போன் கவர்களால் ஏற்படும் தீமைகளும் அதற்கான தீர்வுகளையும் நாம் அறிந்துகொள்வோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்மார்ட்போன் காலமான இன்றைய ஸ்மார்ட் யுகத்தில் புதிதாக போன் வாங்கும் அனைவரும் அடுத்து கையோடு வாங்குவது போன் கேஸ் எனப்படும் அதன் கவர் தான். மொபைல் போன்களை கீறல்களில் இருந்து பாதுகாக்க நாம் அனைவரும் போன் கேஸ் கவர் பயன்படுத்துகிறோம்.

இப்படி பாதுகாப்புக்காக பயன்படுத்தும் இந்த போன் கவரில் தீமைகள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா. அதை அவசியம் தெரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வுகளையும் நாம் கண்டறியமுடியும்.

  • கவரை பயன்படுத்தும் மொபைல் போன் விரைவாக வெப்பமடைகிறது. ஃபோன் சூடாவதால் அது சீக்கிரமே ஹேங்க் ஆகும். விட்டு விட்டு ஸ்லோவாக இயங்குகிறது.
  • கவர் இருப்பதால், போன் சீக்கிரம் சூடாகிவிடுகிறது. இதனால் போனை வேகமாக சார்ஜ் செய்ய முடியாது என்றும் சில தகவல்கள் கூறுகிறது.
  • நல்ல தரமான போன் கவரைப் பயன்படுத்தவில்லை என்றால், பாக்டீரியாக்கள் சேரும் அபாயம் உள்ளது.
  • உங்கள் கவர் காந்தங்களால் ஆனது என்றால், அது ஜிபிஎஸ் மற்றும் compass போன்ற செயல்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
  • கடைசியாக, மற்றொரு குறைபாடு என்னவென்றால், இப்போதெல்லாம் மொபைல் போன்கள் பல டிசைன்களில் வருகின்றன. அதனால் கவர் போட்டால் அதன் டிசைன், லுக் எல்லாம் மறைந்துவிடும்.

இதையும் படிங்க: வயல் உழவு செய்ய இப்படி ஒரு கண்டுபிடிப்பா? ரூ.3000 செலவில் சாதித்த விவசாயி!

top videos

    கவர் இருப்பதால் ஹீட் ஆவது தான் தலையாய பிரச்சனை என்பதல் சார்ஜ் போடும் போது கவரை எடுத்துவிட்டு சார்ஜ் போடுவது நலம். அதேபோல, நீண்ட நேரம் வீடியோ எடுத்தாலும் கவரை எடுத்து பயன்படுத்த வேண்டும்.

    First published:

    Tags: Mobile phone, Smart Phone