முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த பேஸ்புக் நிறுவனம்… கலக்கத்தில் ஊழியர்கள்!

இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த பேஸ்புக் நிறுவனம்… கலக்கத்தில் ஊழியர்கள்!

பேஸ்புக்

பேஸ்புக்

மெட்டா நிறுவனம் பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவிலான பொருளார மந்தமும் இதற்கு ஒருவகையில் காரணம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகான கால கட்டத்தில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக சர்வதேச அளவில் மிகப் பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான தங்கள் ஊழியர்களை விட்டிற்கு அனுப்பியுள்ளனர். அமேசான், ஃபிளிப்கார்ட், மெட்டா, டுவிட்டர் என ஜாம்பவான் நிறுவனங்களும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 2022 ஆம் ஆண்டு தொடக்கதில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 2.90 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

ஃபேஸ்புக் ஏற்கனவே கடந்த ஆண்டு மெகா ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில் இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கை மெட்டா நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்க் ஜூக்கர்பெர்க் மார்ச் மாதமே விருப்பம் இருந்தால் மட்டுமே இருக்கவும், இல்லையெனில் வெளியேறலாம் என அனைத்து உயர்மட்ட அதிகாரிகளையும் கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவரான லோரி கோலர் பணி நீக்கப்பட்டியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுவாக மாஸ் பணிநீக்க அறிவிப்புகள் அனைத்தும் விடியற்காலையில் தான் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பும். அந்த வகையில் 2வது சுற்றில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கான அறிவிப்பு அமெரிக்க நேரப்படி காலை 3- 5 மணிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்கத்தில் 2 விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப பிரிவு மற்றும் துவக்க நிலை ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையில் சிக்குவார்கள் என்பது தான் அது. இந்த செய்தி உண்மையானால் இந்த பணி நீக்க நடவடிக்கையில் இந்திய ஊழியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம்.

Read More : சாட் ஜிபிடி உதவியால் வீட்டுப்பாடம்.. ஈசியாக மாட்டிக்கொண்ட மாணவன்.. நடந்தது இதுதான்!

மெட்டா ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஐஐடி, ஐஐஎம் மற்றும் பிற முன்னணி கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளை நேரடியாக பணியில் சேர்த்து வரும் வேளையில், இளம் டெக் வல்லுனர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 2வது பணிநீக்க சுற்றில் இந்தியா ஊழியர்கள் அதிகம் பணிநீக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. இதேநேரத்தில் இந்தியாவில் புதிய தலைவர் வந்துள்ளதால் அதிக பணிநீக்கத்திற்கு வாய்ப்பு அதிகம். 2022 டிசம்பர் மாத தகவல் படி மெட்டாவில் 86,482 ஊழியர்கள் இருக்கின்றனர். இதில் குறைந்தது 5 முதல் 10 விழுக்காடு வரை இந்தியர்கள் இருக்கலாம். அதிலும் தொழில்நுட்ப பிரிவில் அதிக அளவில் இந்தியர்கள் இருக்கிறார்கள்.

top videos

    மெட்டா நிறுவனம் பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவிலான பொருளார மந்தமும் இதற்கு ஒருவகையில் காரணம். எனவே நட்டத்தை சரிக்கட்ட தொடர்ந்து ஆட்குறைப்ப நடவடிக்கையை கையில் எடுத்து வருகிறது மெட்டா நிறுவனம். மெட்டாவின் இந்த அறிவிப்பால் அதன் இந்திய ஊழியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

    First published:

    Tags: Facebook, Meta, Technology