ஒரு முறையாவது ஐபோன் வாங்கிவிட வேண்டும் என்பது பலரது வாழ்நாள் ஆசையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களும், தரமும் தான். சந்தையில் இதனுடன் நேரடி போட்டியில் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கின்றன.
கூகுள் நிர்வகித்துவரும் Android இயங்குதளம், புதிய பதிப்புகளை வெளியிட்டு யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் இன்னும் சில நாள்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பை நிறுவனம் வெளியிட உள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த கூகுளின் வருடாந்திர I/O 2023 நிகழ்வில் இது குறித்த தகவலை நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, ஆண்ட்ராய்டு 14 பதிப்பில் பல புதிய அம்சங்கள் வரவுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த அம்சங்களில் சில, ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் இருக்கும் iOS இயங்குதளத்தை ஒத்திருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்ட்ராய்டு 14 அப்டேட்
இதில் முக்கிய அம்சமாக ஆப்பிள் சாதனங்களில் உள்ள பேட்டரி திறன் காட்டும் அமைப்புகள் போன்ற சேவை கிடைக்கும் என கேட்ஜெட் தொழில்நுட்பங்களை உன்னிப்பாக கவனித்து வரும் டிப்ஸ்டர் மிஷால் ரகுமான் கூறியுள்ளார். இதனை கூகுள் சோதனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டரி மேனேஜர் என்ற பெயரில் இதன் தரவுகள் காணப்பட்டதாக அவர் உறுதிசெய்துள்ளார். அவர் சமீபத்தில் வாங்கிய கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 14 நிறுவப்பட்டிருந்தது.
Also Read | 3 சூப்பரான ரீசார்ஜ் பிளான் இதோ.. வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்தான்!
“பேட்டரி மேனேஜர் எனும் செயலி API-இல் இணக்கப்பட்டிருந்தது. அதனால், இதன் தரவுகள் சில நேரங்களில் சரியாகவும், சில நேரங்களில் தவறுதலாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது” என மிஷால் தெரிவித்தார். இந்த செயலியானது பொதுவெளி பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், GitLab தளத்தில் இருந்து மட்டுமே இதனை பதிவிறக்கம் செய்ய முடியும்.
சாதாரணமாக கூகுள் ப்ளே ஸ்டோர் வாயிலாக இதனை பதிவிறக்கம் செய்ய இயலாது. ஆனால், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மிஷால் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அவர் கூறுகையில், "ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வெகு நாள்களாக ஒரு கவலை இருந்தது. அது அவர்கள் போனில் ஏற்படும் பேட்டரி பிரச்சினை தான். அந்த கவலையை கூகுள் போக்க திட்டமிட்டது நல்ல விஷயம் தான்" என்றார்.
பேட்டரி திறனை கண்டறியும் ஐபோன்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அதன் அனைத்து சாதனங்களிலும் பேட்டரியின் திறனை கண்காணிக்கும் செயலி நிறுவப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த சேவையை யூஸர்களுக்கு ஆப்பிள் வழங்கி வருகிறது.
இதன் காரணமாக பழைய ஆப்பிள் தயாரிப்புகளை யூஸர்கள் வாங்கும்போது, பேட்டரியின் திறன் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து வாங்க முடியும். இதனால், தாங்கள் வாங்கும் பொருளின் தரத்தில் ஆப்பிள் வெளிப்படையாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple IOS, Apple iphone, IOS, IPhone