முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / குறைந்த விலை லேப்டாப் வாங்க வேண்டுமா? விரைவில் அறிமுகமாகவுள்ள இனிஃபினிக்ஸ் லேப்டாப்...

குறைந்த விலை லேப்டாப் வாங்க வேண்டுமா? விரைவில் அறிமுகமாகவுள்ள இனிஃபினிக்ஸ் லேப்டாப்...

லேப்டாப்

லேப்டாப்

ஏப்ரல் 19-ம் தேதி இனிஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகமாகவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் யாரும் எதிர்பார்க்காத குறைந்த விலையில் புதிய லேப்டாப் மாடலை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி இனிஃபினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி இன்புக் Y1 பிளஸ் நியோ என்ற புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்ய இன்பினிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்குள் இந்த லேப்டாப்பின் விலை இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. அந்த புதிய லேப்டாப்பில் இருக்கும் அம்சங்கள் குறித்த தொழில்நுட்ப தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த புதிய லேப்டாப் மிகவும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன், அலுமினியம் அலாய் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் லுக் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலில் 15.6 இன்ச் விவிட் கலர்-ரிச் டிஸ்பிளே வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் 82 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதியுடன் அறிமுகமாக உள்ளது.

இண்டெல் நிறுவனத்தின் i3 10th Gen பிராசஸர் உள்ளது இந்த இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப்பில். கையாள்வதற்கு மிகவும் எளிதான backlit கீபோர்டு உள்ளது இதில். இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் மாடலில் இரண்டு 2 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் மாடல் வெளிவர உள்ளது.

Also Read : எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

அதோடு இந்த புதிய லேப்டாப்பில் 40W பேட்டரி உள்ளதால் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். சார்ஜ் செய்ய சி டைப் சார்ஜிங் வசதி இருப்பதால் பாஸ்ட் சார்ஜிங் செய்ய முடியும். ஒரு மணி நேரத்தில் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடமுடியும். டூயல் பேண்ட் வைஃபை, 5.1 புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், டைப் ஏ யுஎஸ்பி 3.2 ஜென்1 மற்றும் எச்டிஎம்ஐ போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி அம்சங்களும் உள்ளன.

top videos

    இத்தனை அம்சங்களுடன் வெளிவர உள்ள இநத லேப்டாப்பின் விலை ரூ.25,000 தான் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளதால் இதன் வரவை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    First published:

    Tags: Budget laptop, Laptop