இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் எப்எம் ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இனி தயாரிக்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் எப்எம் ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று இந்திய செல்லுலர் மற்றும் எலக்ட்ரானிக் அசோசியேசன் மற்றும் மேனுஃபாக்ச்சரர்ஸ் அசோசியேசன் ஃபார் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மிக எளிதாகவும் அவசர காலங்களிலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களின் கணிப்பு.
மேலும் இதற்கான உத்தரவை தகவல் தொடர்புத்துறை அமைச்சகமானது அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ளது. ஒருவேளை ஒரு நிறுவனத்தின் போனில் இந்த வசதி இல்லையெனில் அதனை பயன்படுத்தும் விதத்தில் அவர்கள் அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன்களில் எப்எம் ரேடியோ ரிசீவர் வசதியானது பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அதனை மாற்றியமைத்து எப்எம் வசதியை பொறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலே கூறிய இரண்டு அசோசியேஷன்களும் தற்போது மொபைல் போன் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் இந்த மாற்றங்களை துரித முறையில் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. சாதாரண மொபைல் ஃபோன்களைத் தவிர தற்போது வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் எப்எம் ரேடியோ வழங்கப்படுவதில்லை. அனைவரும் டிஜிட்டல் முறையில் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் பலரும் யுடியூப் வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
Read More : ஐபோன் இவ்வளவு விலை கம்மியா? தள்ளுபடியை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!
ஆனால் உண்மையிலேயே எப்எம் ரேடியோ தான் முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் என அனைவருக்கும் பேரிடர் காலங்களின் போது எப்எம் ரேடியோக்கள் மிகப் பெரும் அளவில் உதவி செய்துள்ளன என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் எப்எம் ரேடியோக்கள் நாட்டின் தகவல் தொடர்பில் முக்கிய பங்கு வகித்துள்ளன உள்ளன எனவும் கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பெருந்தொற்றுடன் போராடுவதற்கு எப்எம் ரேடியோக்கள் மிகப் பெரும் அளவில் உதவி செய்துள்ளன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology