இன்றைய தொழில்நுட்ப சாதனங்களில் முக்கிய பொருளாக லேப்டாப் இருக்கிறது. பல நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களைக் கொண்ட லேப்டாப்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அதில் சிறந்த லேப்டாப் எது, எந்த பிராண்டை தேர்வு செய்வது, முக்கியமாக விலையைப் பற்றிய கேள்விகள் இருக்கும். அந்த வகையில் HP போன்ற முதன்மையான பிராண்டுகளின் லேப்டாப்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்பது நீண்ட காலமாகப் பலரும் கூறும் கருத்தாக உள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் சமீபத்தில் மலிவு விலையைக் கொண்ட குரோம்புக் லேப்டாப்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதன்படி, புதிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்டெல்லின் செலரான் N4500 செயலி மூலம் இயங்கக் கூடிய அற்புதமான ஒரு லேப்டாப்பை HP நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் முதல் செயல்திறன்கள் வரை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
HP குரோம்புக், HP நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த குரோம்புக் இந்தியாவில் ரூ.28,999-இல் இருந்து தொடங்குகிறது. இந்த மடிக்கணினி இதுஃ பாரஸ்ட் டீல் மற்றும் மினெரல் சில்வர் ஆகிய இரு வேறு வண்ணங்களில் வருகிறது. அதன்படி இந்த HP குரோம்புக்கில் வெளியாக உள்ள பிற குரோம்புக் பிரிவுகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
இப்போதெல்லாம் ஒரு ஹை எண்ட் செல்போன் என்றாலே ரூ.25ஆயிரம் என்ற நிலையில் இந்த லேப்டாப் செல்போன் விலையை விடவும் குறைவு. ஏனென்றால் ரூ.23 ஆயிரத்துக்கும் இந்த லேப்டாப் கிடைக்கும். HP குரோம்புக் x360 14a மாடலின் விலை ரூ. 28,999/- ஆக உள்ளது. அடுத்தாக HP குரோம்புக் x360 13.3 மாடல் ரூ 44,999/- என்கிற விலையில் உள்ளது. இதே போன்று, HP குரோம்புக் 11 மாடலின் விலை ரூ. 22,999 எனவும், HP குரோம்புக் 14’’ இன்ச் டச் ஸ்கிரீன் மாடலின் விலை ரூ 26,999/- எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
HP பிராண்ட் சரியான லேப்டாப்களை வழங்குவதன் மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை ஆதரிக்க விரும்புவதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த புதிய குரோம்புக் 15.6 இன்ச் லேப்டாப்கள், வீட்டில் அல்லது வகுப்பறையில் படிக்கும் போது உற்பத்தித்திறனைச் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மிகவும் ஸ்டைலானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும், நல்ல செயல்திறன் கொண்டதாகவும், இளம் மாணவர்களின் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று HP நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் பெர்சனல் சிஸ்டம்ஸ் மூத்த இயக்குனர் விக்ரம் பேடி குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைத்து புதிய HP 15.6 இன்ச் குரோம்புக் வகையும் பெரிய திரை மற்றும் Wifi வசதி உடன் வலுவான இணைப்பு பெற்று வருவதாகக் கூறியுள்ளனர். மேலும், இதில் 11.5 மணிநேரம் வரையிலான பேட்டரி வசதி தரப்பட்டுள்ளது. இதன் ஸ்கிரீன் HD வகையைக் கொண்டதாக உள்ளது. இது ஹைப்ரிட் ஜெனரேஷன் வசதி கொண்டுள்ளதால், எளிதான பொழுதுபோக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த புதிய 15.6 இன்ச் குரோம்புக் என்பது இளம் மாணவர்களுக்கான விருப்பத் தேர்வாகவும், வசதியான லேப்டாப்பாகவும் இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற குரோம்புக் வகைகளைப் போன்றே இதன் நிறமும் சிறப்பான ஒன்றாகத் தரப்பட்டுள்ளது. எனவே, இதைப் பார்க்கும் போது பிரீமியம் தரத்தையும், அதிநவீன தோற்றத்தையும் உணர முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Budget laptop, HP, Laptop