முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஒரே வாட்ஸ் அப் கணக்கை 2 போன்களில் பயன்படுத்துவது எப்படி தெரியுமா..?

ஒரே வாட்ஸ் அப் கணக்கை 2 போன்களில் பயன்படுத்துவது எப்படி தெரியுமா..?

வாட்ஸ் ஆப்..!

வாட்ஸ் ஆப்..!

புதிய வசதியாக ஒரே வாட்ஸ் அப் கணக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபோன்களில் பயன்படுத்தும் புதிய வசதியை அது கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் ஒருவருடைய வாட்ஸ் அப் கணக்கை நான்கு டிவைஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே உள்ளடக்கம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் மிக அதிக மக்களினால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலியான வாட்ஸ் அப் சமீப காலமாக பல்வேறு புதிய அப்டேட்டுகளை அளித்து வருகிறது. வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக பல்வேறு மெசஞ்சர் செயலிகள் சந்தையில் வந்து விட்ட காரணத்தினாலும், தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையினாலும் யூசர்களை கவர்ந்து இழுக்க பல்வேறு புதிய புதிய வசதிகளை வாட்ஸ் அப் அளித்து வருகிறது. அதில் மற்றொரு புதிய வசதியாக ஒரே வாட்ஸ் அப் கணக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபோன்களில் பயன்படுத்தும் புதிய வசதியை அது கொண்டு வந்துள்ளது.

இதற்கு முன்னர் ஒருவருடைய வாட்ஸ் அப் கணக்கை நான்கு டிவைஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே உள்ளடக்கம். தற்போது உள்ள புதிய அப்டேட்டின் படி யூசர் தன்னுடைய வாட்ஸ்அப் கணக்கை மற்றொரு ஸ்மார்ட்போனுடனும் இணைத்துக்கொள்ள முடியும். வெப் பிரவுசரில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப், டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப் என ஒட்டுமொத்தமாக நான்கு டிவைஸ்களில் உங்களால் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் என்ற வேறுபாடின்றி உங்களது வாட்ஸ் அப் கணக்கை எங்கிருந்து வேண்டுமானாலும் உங்களால் பயன்படுத்த முடியும். மேலும் உங்களது தனிப்பட்ட செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வசதியின் மூலம் தன்னுடைய வாட்ஸ் அப் கணக்கை இணைத்துள்ள நான்கு டிவைஸ்களில் எதை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.

Read More : தொலைந்து, திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய திட்டம்... உருவாகிறது புதிய அமைப்பு

மேலும் வாட்ஸ் அப் கணக்கை இணைத்துள்ள பிரைமரி டிவைஸ் நீண்ட நேரம் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், மற்ற அனைத்து டிவைஸ்களில் இருந்தும் உங்களது வாட்ஸ் அப் தானாகவே லாக் அவுட் செய்யப்பட்டு விடும் என்பதும் கூடுதல் தகவல்.இந்த புதிய வசதியின் மூலம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு டிவைசில் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்துவதற்கு புதிதாக ரெஜிஸ்டர் செய்ய வேண்டிய அவசியம் இனி இருக்காது.

top videos

    எவ்வாறு வாட்ஸ் அப் கணக்கை மற்றொரு போனில் பயன்படுத்துவது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்:

    முதலில் பயன்படுத்த வேண்டிய போனில் வாட்ஸ் அப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
    பிறகு வாட்ஸ் அப்பை திறந்து அதில் வாட்ஸ் அப் கணக்கிற்க்கான மொபைல் எண்ணை உள்ளீடு செய்வதற்கு பதிலாக, “லிங்க் டு எக்சிஸ்டிங் அக்கவுண்ட்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் கியூ ஆர் கோடு உருவாக்க முடியும்.
    இப்போது உங்களது பிரைமரி போனை எடுத்து அதில் வாட்ஸ் அப் செயலியை திறந்து, செட்டிங்கிர்க்கு சென்று “லிங் டு டிவைஸஸ்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
    இப்போது பிரைமரி போனில் கேமராவை கொண்டு, இரண்டாவது போனில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
    ஸ்கேன் செய்து முடித்த பிறகு உங்களது பிரைமரி போனில் உள்ள வாட்ஸ் அப் கணக்கின் அனைத்து தரவுகளும் இரண்டாவது போனிலும் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
    இப்போது உங்களால் இரண்டாவது போனிலிருந்தும் உங்களது வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தி செய்திகளை அனுப்புவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வது என அனைத்தையும் செய்ய முடியும்.
    First published:

    Tags: Technology, Whatsapp Update