முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இன்டர்நெட் ஸ்பீடு.. ஃபேஸ்புக்கில் வந்த சூப்பர் அப்டேட்.. அசத்தும் மெட்டா நிறுவனம்..

இன்டர்நெட் ஸ்பீடு.. ஃபேஸ்புக்கில் வந்த சூப்பர் அப்டேட்.. அசத்தும் மெட்டா நிறுவனம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மெட்டா நிறுவனம் புதிய புதிய அம்சங்களையும் வசதிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தக் கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு அசத்தலான புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது மெட்டா.. என்ன அம்சம் என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் ஃபேஸ்புக். ஃபேஸ்புக் உலகம் முழுவதும் ஒரு பெரிய இணைப்பு சாதனமாக செயல்பட்டு வருகிறது. இந்த செயலி பல விதமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான ஃபேஸ்புக் தொடர்ந்து அதன் பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல புதிய அம்சங்களை அதன் ஆப்ஸில் சேர்த்து வருகிறது. அந்த வரிசையில், பேஸ்புக்கின் புதிய அப்டேட்டில் ஒரு சூப்பர் அம்சம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக சமூக ஊடகம் தொடர்பான மேம்பட்ட வசதிகளை ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்து வந்த மெட்டா நிறுவனம் தற்போது கொஞ்சம் டெக்னிக்கலாகவும் அப்டேட்களை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, அருகிலுள்ள Wi-Fi நெட்வொர்க்குகளைச் சரிபார்க்கும் ஆப்சனையும் ஃபேஸ்புக் இப்போது அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. அதேபோல், பயனர்கள் தங்கள் டிவைசின் தற்போதைய இணைய வேகம் எவ்வளவு என்பதை சரிபார்க்க உதவும் இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் அம்சத்தையும் ஃபேஸ்புக் இப்போது கொண்டுள்ளது.

Read More : செம ஸ்டைல்.. வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி.. சிறப்பம்சங்கள் மற்றும் விலை நிலவரம்!

ஃபேஸ்புக்-ன் ஸ்பீட் டெஸ்ட் சோதனை அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஃபேஸ்புக் செயலியின் சமீபத்திய அப்டேட்டிற்கு பிறகு, இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆகையால் உங்கள் ஃபேஸ்புக் அப்டேட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது, இந்த புதிய அம்சத்தை நாம் எப்படி இயக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்…

முதலில் பேஸ்புக்-ஐ திறக்கவும். முதலில் உங்களுடைய பேஸ்புக் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பேஸ்புக்-ஐ லாகின் செய்துகொள்ளுங்கள். மேல் வலது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகளை கிளிக் செய்யவும்.
பிறகு Settings & Privacy என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, Wi-Fi & cellular performance என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு speed tab என்பதை கிளிக் செய்து, Run speed test விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு, இறுதியாக Continue என்ற பட்டனை பிரஸ் செய்யவும். அடுத்த பக்கத்தில், Run speed test பட்டனை தட்டவும். அவ்வளவுதான், உங்கள் போனில் இருக்கும் இன்டர்நெட் வேகத்தை ஃபேஸ்புக் ஆப் அளக்க ஆரம்பிக்கும்.
வேக சோதனை முடிந்ததும், பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்ற வேகம் இரண்டையும் அது உங்களுக்கு டிஸ்பிளேவில் காண்பிக்கும். இந்த முறையை பின்பற்றி இனி நீங்கள் கூகுள் மற்றும் மற்ற ஆப்ஸ் உதவி இல்லாமல், இன்டர்நெட் வேகத்தை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம்.
First published:

Tags: Facebook, Technology