குறுஞ்செய்திகள், ஆவணங்கள் மட்டுமல்ல புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பவும் தற்போது உலக அளவில் பெரும் பயன்பாட்டில் இருப்பது வாட்ஸ் அப் தான். இதுவரை ஒரே சமயத்தில் 30 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தான் வாட்ஸ் அப் மூலம் பகிர முடியும். ஆனால் இப்போது, ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த அம்சம் சமீபத்திய ஆண்ட்ராய்டு அப்டேட் ஆனா வாட்ஸ்அப் வெர்ஷன் 2.22.24.73 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பகிரப்படும் ஆவணங்களுக்கு கேப்ஷன்களைச் சேர்க்கும் வசதியும் உள்ளது.
முன்பு, வாட்ஸ்அப் மூலம் போட்டோஸ் மற்றும் வீடியோ பைல்களுக்கு மட்டுமே கேப்ஷன்களைச் சேர்க்க முடியும். ஆனால், இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் புதிய வரம்பை குறிப்பிடவில்லை என்றாலும், வாட்ஸ் அப் குழுவின் விளக்கத்தை குறிக்கும் எழுத்து வரம்பும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் தற்சமயம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் மட்டுமே கிடைக்கின்றது. ஆனால், இவை விரைவில் iOS-க்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
Read More : வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!
வாட்ஸ்அப் தற்போது "கெப்ட் மெசேஜஸ்" என்ற அம்சத்தை பரிசோதனை செய்து வருகிறது. இது காணாமல் போகும் செய்திகளையும் டிரான்ஸ்கிரிப்ட்களையும் iOS இல் வைத்திருக்க அனுமதிக்கிறது. கடந்த ஆண்டு வாட்ஸ் அப் ஃபைல் அளவின் வரம்பை 100MB இலிருந்து 2GB ஆக உயர்த்தியது. ஆனால் இந்த அம்சம் iOS இயங்கு தளத்திற்கு இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
இப்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரே நேரத்தில் எப்படி 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவது என்பது குறித்து பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology, WhatsApp, Whatsapp Update