முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டை எளிதாக டி-ஆக்டிவேட் செய்வதற்கான வழி இதோ..!

உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டை எளிதாக டி-ஆக்டிவேட் செய்வதற்கான வழி இதோ..!

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

ட்விட்டர் உங்கள் அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க எந்த நேரடி விருப்பத்தையும் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, உங்கள் அக்கவுண்ட்டை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய வழி உள்ளது.

 • Last Updated :
 • Tamil Nadu, India

ட்விட்டர் உங்கள் அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க எந்த நேரடி விருப்பத்தையும் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, உங்கள் அக்கவுண்ட்டை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய வழி உள்ளது. 30 நாள் டி-ஆக்டிவேட் காலத்திற்குள் உங்கள் அக்கவுண்ட்டை அணுகவில்லை என்றால், உங்கள் அக்கவுண்ட் நிரந்தரமாக நீக்கப்படும். மேலும் உங்கள் அக்கவுண்ட்டுடன் உங்கள் பயனர் பெயர் இணைக்கப்படாது.

Read More : வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி எடிட் செய்யலாம்... வருகிறது புதிய அம்சம்...!

எனவே, உங்கள் ட்விட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்வது உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான முதல் படியாகும். இது உங்கள் கணக்கை மீண்டும் இயக்க விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு அனுமதி தருகிறது. உங்கள் ட்விட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்துவிட்டால், உங்கள் பயனர் பெயர் மற்றும் பொது சுயவிவரத்தை twitter.com, iOS-க்கான ட்விட்டர் அல்லது ஆண்ட்ராயிடுக்கான ட்விட்டர் ஆகிய தளத்திலும் பார்க்க முடியாது.

top videos

  இனி எப்படி உங்களின் ட்விட்டர் அக்கவுண்ட்டை எளிதாக டி-ஆக்டிவேட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

  முதலில் உங்கள் ட்விட்டர் கணக்கில் உள்நுழையவும். அடுத்து ட்விட்டர் முகப்புப் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் (profile picture) கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "Settings and privacy" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  இது, உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கிற்கு சென்றதும், அந்த பக்கத்தின் கீழே சென்று, "Deactivate your account" என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் அக்கவுண்ட்டை டி-ஆகிட்டிவேட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ட்விட்டர் ஒருமுறை உறுதிப்படுத்த சொல்லி கேட்கும்.
  உங்கள் அக்கவுண்ட்டை டி-ஆகிட்டிவேட் செய்ய விரும்புகிறீர்கள் எனில், "Deactivate" பட்டனை கிளிக் செய்யவும்.அடுத்து, ட்விட்டர் அக்கவுண்ட்டின் உரிமையாளர் நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த உங்கள் பாஸ்வேர்டை என்டர் செய்யுமாறு ட்விட்டர் கேட்கும்.
  உங்கள் பாஸ்வேர்டை என்டர் செய்ததும், "Deactivate account" என்பதை மீண்டும் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ட்விட்டர் கணக்கு டி-ஆகிட்டிவேட் செய்யப்படுகிறது.
  உங்கள் அக்கவுண்ட் இனி ட்விட்டரில் காணப்படாது, மேலும் உங்கள் ட்வீட்கள், பின்தொடர்பவர்கள் மற்றும் பிற அக்கவுண்ட் தகவல்கள் ட்விட்டர் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். இந்த நேரத்தில் உங்கள் எண்ணத்தை மாற்றி, உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்த விரும்பினால், உங்கள் கணக்கில் உள்நுழையலாம் மற்றும் உங்கள் கணக்கு மீண்டு ஆக்டிவேட் செய்யலாம்.
  உங்கள் 30 நாள் டி-ஆகிட்டிவேஷன் முறைமைக்கு பிறகு, உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் நிரந்தரமாக நீக்கப்படும். 30-நாள் காலக்கெடுவில் உங்கள் அக்கவுண்ட்டில் உள்நுழையவில்லை என்றால், உங்கள் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்க விரும்புகிறீர்கள் என்பதாக ட்விட்டர் புரிந்து கொள்ளும்.
  உங்கள் அக்கவுண்ட் நீக்கப்பட்டதும், உங்களது அக்கவுண்டானது ட்விட்டர் அமைப்புகளில் கிடைக்காது. மேலும், உங்களால் உங்கள் முந்தைய அக்கவுண்ட்டை மீண்டும் இயக்க முடியாது, பழைய ட்வீட்கள் எதையும் உங்களால் பார்க்க முடியாது. 30-நாள் டி-ஆகிட்டிவேஷன் முறைமைக்கு பிறகு உங்கள் அக்கவுண்ட் நீக்கப்பட்டவுடன், உங்கள் பயனர்பெயர் மற்ற Twitter கணக்குகளால் பதிவு செய்வதற்கான வாய்ப்பை தரும்.
  First published:

  Tags: Elon Musk, Technology, Twitter