முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / தெரியாத எண்களிடம் இருந்து போன்கால்.. தொல்லையா இருக்கா? இதை பண்ணுங்க!

தெரியாத எண்களிடம் இருந்து போன்கால்.. தொல்லையா இருக்கா? இதை பண்ணுங்க!

ஸ்பாம் கால்கள்

ஸ்பாம் கால்கள்

உங்கள் போனில் வரும் ஸ்பாம் கால்கள் முறையாக தடுப்பது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என உங்கள் வட்டத்தில் இருப்பவர்கள் ஃபோனில் அழைக்கிறார்களோ, இல்லையோ தவறாமல் ஸ்பாம் கால்கள் வந்து கொண்டிருக்கும். அதேபோல ஸ்பாம் மெசேஜ்களுக்கும் வந்துகொண்டே இருக்கும். தொடக்கத்தில் ஒன்றிரண்டு என்று தொடங்கி நாளடைவில் எண்ணற்ற ஸ்பாம் கால்கள் வரும்போது உங்களுக்கு அது மிகுந்த இடையூறாக அமையும்.

இந்த ஸ்பாம் கால்கள் உங்கள் கவனத்தை திசை திருப்புவதாகவும் அமையும். சில சமயம், ஸ்பாம் கால்களை தவிர்க்க நினைத்து சிலர் ஃபோனை சைலண்ட் மோடில் வைத்து விடுவர். இதனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கால்களையும் தவற விடக் கூடும்.

இது மட்டுமல்லாமல், வெறுமனே நம்பரில் வருகின்ற அனைத்து கால்களையும் ஸ்பாம் என்று நீங்கள் குழப்பிக் கொள்வீர்கள். வங்கியில் இருந்து வரக் கூடிய முக்கியமான அழைப்புகளையும் இதன் மூலம் தவறவிட நேரிடும். ஆண்டிராய்ட் ஃபோன்கள் மற்றும் ஐஃபோன்கள் என அனைத்திலுமே ஸ்பாம் கால்களை தடுப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அது குறித்து இங்கு தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

ஆண்டிராய்ட் ஃபோனில் ஸ்பாம் நம்பர்களை தடுப்பது எப்படி?

  • உங்கள் ஆண்டிராய்ட் ஃபோனில் ஃபோன் ஆப் ஓப்பன் செய்து கொள்ளவும்.
  • ஸ்கிரீனில் மேல் வலது ஓரமாக உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதனுள் கால் ஹிஸ்டரியை தேர்வு செய்யவும்.
  • இப்போது கால் ரெக்கார்ட் பட்டியலில் உங்களுக்கு வந்த ஸ்பாம் அழைப்பை தேர்வு செய்து, அதை டேப் செய்யவும்.
  • தொடர்புடைய நம்பரை ஸ்பாம் அல்லது ஸ்பாம் இல்லை என்று தேர்வு செய்யும் ஆப்சன் உங்களுக்கு கிடைக்கும். அதன் பிறகு அதை டேப் செய்து பிளாக் செய்யவும்.
  • முன்பின் தெரியாமல் வருகின்ற அனைத்து அழைப்புகளையும் பிளாக் செய்ய, ஃபோன் ஆப்பில் சென்று அதே மூன்று புள்ளிகளில் மீண்டும் டேப் செய்யவும்.
  • அதில் செட்டிங்ஸ் தேர்வு செய்து, பிளாக்டு நம்பர்ஸ் என்பதை பார்க்கவும்.
  • அதில் உள்ள டாக்கிள் டெக்ஸ்ட்-ஐ அன்னோன் என்று தேர்வு செய்யவும்.
  • Also Read : 5G சிக்னலின் மூலம் ஏலியன்களால் பூமியின் இருப்பிடத்தை கண்டறிய முடியுமாம்..!

    ஐஃபோனில் பிளாக் செய்வது எப்படி?

    • ஃபோனில் செட்டிங்ஸ் செல்லவும்.
    • ஸ்க்ரோல் டவுன் செய்து, சைலன்ஸ் அன்னோன் காலர்ஸ் என்பதனை தேர்வு செய்யவும்.
    • அதன் வலதுபுறம் டாக்கிள் செய்வதன் மூலமாக அந்த வசதியை ஆன் செய்யவும்.
    • அன்னோன் நம்பர்களை நீங்கள் பிளாக் செய்த பிறகு, அதில் வரும் அழைப்புகள் உங்கள் வாய்ஸ்மெயில் பாக்ஸ்க்கு சென்றுவிடும்.
    • ஆகையால் அன்னோன் காலர்ஸ் குறித்து உங்களுக்கு நோடிஃபிகேஷன் வராது.
    • ஸ்பாக் கால் பிளாக் செய்த பிறகும் கூட, அந்த அழைப்புகள் குறித்த விவரங்களை மிஸ்டு கால் பட்டியலில் நீங்கள் பார்க்க முடியும். வேண்டிய நம்பர்களை தவறுதலாக பிளாக் செய்திருந்தால் இந்தப் பட்டியலை சரிபார்த்து நீக்கிக் கொள்ளலாம்.

First published:

Tags: Phone call, Scam, Smartphone, Technology