முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / செல்போன் கையில இருக்கா? மோசடியில் சிக்கிடாதீங்க.. இப்படி செய்தால் தப்பிக்கலாம்!

செல்போன் கையில இருக்கா? மோசடியில் சிக்கிடாதீங்க.. இப்படி செய்தால் தப்பிக்கலாம்!

அடிக்கடி ஸ்பேம் கால் வருதா?... ஈஸியா பிளாக் செய்யலாம்!

அடிக்கடி ஸ்பேம் கால் வருதா?... ஈஸியா பிளாக் செய்யலாம்!

how to block spam calls : கடந்த சில தினங்களாக அனைவருக்கும் ஸ்பேம் கால் வருவது அதிகரித்துள்ளது. நம்மில் பலர் இவர்களுக்கு பத்தி கூறியே ஓய்ந்து போயிருப்போம். இனி அந்த கவலை வேண்டாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கையில் செல்போன் இருந்தாலே ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது. எப்போது எந்த அழைப்பு வரும் எந்த மோசடிக்காரர்கள் வலை விரிப்பார்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. தெரியாத நம்பர்களிடம் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா?... ஆம் எனில், இந்த கட்டுரை உங்களுக்கானது. ஆன்லைன் மோசடிகள் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. பல சமயங்களில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அது மோசடி அழைப்பாக இருக்குமோ என்று எண்ணி அழைப்பை எடுக்காமல் இருப்போம். இதனால், பல நேரங்களில் முக்கியமான அழைப்புகளை கூட தவறவிடுகிறோம்.

நாம் எவ்வளவு எங்களை பிளாக் செய்தாலும், மோசடி செய்பவர்கள் புதிய புதிய எண்களில் இருந்து நம்மை தொடர்பு கொள்வார்கள். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்.? இவர்களை எப்படி ஒட்டு மொத்தமாக பிளாக் செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு மொபைலில் தெரியாத எண்களை எவ்வாறு தடுப்பது :

  • உங்கள் Android மொபைலில் ஃபோன்செயலியை திறக்கவும்.
  • திரையின் மேல் வலது மூலையில் மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்து, Recent Calls தேர்ந்தெடுக்கவும்.
  • தெரியாத எண்ணிலிருந்து வந்த அழைப்புகளை செலக்ட் செய்யவும்.
  • திரையின் அடிப்பகுதியில் உள்ள Block/report spam என்பதை தேர்வு செய்யவும்.
  • எண்ணை ஸ்பேமாகப் புகாரளிக்கவும் என்பதை தேர்வு செய்யவும். அழைப்புகளை பிளாக் செய்ய விரும்பினால், பிளாக் என்பதைத் தட்டவும்.
  • தெரியாத எல்லா எண்களையும் தடுக்க, தொலைபேசி பயன்பாட்டிற்குச் சென்று மீண்டும் மூன்று புள்ளி ஐகானைத் தட்டவும்.
  • அமைப்புகள் (Settings) மற்றும் தடுக்கப்பட்ட எண்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • toggle next to Unknown என்பதை கிளிக் செய்யவும்.

Also Read | தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள்.. ஆப்பு வைக்கும் அதிரடி உத்தரவு!

top videos

    இதற்குப் பிறகு, உங்கள் தொலைபேசியின் அனைத்து அறியப்படாத எண்களும் தடுக்கப்படும். இருப்பினும், உங்கள் நண்பர் தெரியாத எண்ணிலிருந்து உங்களை அழைத்தால், நீங்கள் அதை தவறவிடுவீர்கள். அதனை மனதில் கொண்டு அதற்கேற்ப இந்த ஆப்ஷனை பயன்படுத்தவும்

    First published:

    Tags: Phone call, Technology